திரைத் துளி­கள்

2 mins read
d29d5059-6d6f-420e-a014-ab0b736e85d3
-
multi-img1 of 3

 நடிகர் விஜய் சேதுபதியும் இயக்குநர் மணிகண்டனும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர். மணிகண்டன் இயக்கும் புதிய இணையத் தொடரில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இத்தொடரின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் நடைபெறுகிறது. 'கடைசி விவசாயி' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி, மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்த இணையத் தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், இத்தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 நானி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த 'தசரா' தெலுங்குப் படம் வெளியீடு கண்ட இரு நாள்களில் ரூ.50 கோடி வசூல் கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதா பாத்திரத்தில் நடித்தி ருந்தார். தற்போது தாய்மை அடைந்துள்ள அவர், ரமலான் மாதத்தில் தன் குழந்தையின் வரவை எதிர் பார்த்து காத்திருப்பதாகக் கூறியுள்ளார். அவர் வெளி யிட்டுள்ள ஒரு காணொளிப் பதிவில், கீர்த்தி சுரேஷுக்காகத்தான் 'தசரா' படத்தில் தாம் நடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். "இதுபோன்ற சிறந்த திரைப்படத்தில் நான் பங்களித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடை கிறேன். 'தசரா' படக்குழுவினர் உடனான அனைத்து உற்சாகத் தருணங்களையும் நினைத்து ஏங்குகிறேன். கீர்த்தியுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம்,"

என்று குறிப்பிட்டுள்ளார் பூர்ணா. அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் கீர்த்தி.

 'வணங்கான்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதன் இயக்குநர் பாலா தரப்பு தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'வணங்கான்' படத்தில் முதலில் சூர்யாதான் நாயகனாக நடித்தார். சில நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகினார். இதையடுத்து அருண் விஜய் ஒப்பந்தமானார். மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், ​​ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுவதாகத் தகவல்.

 சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான 'பத்து தல' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பும் பட வசூலும் அப்படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து சென்னையில் கூடிய அப்படக்குழுவினர் படத்தின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். படக் குழுவினருக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்தார்.

 'விடுதலை' படத்துக்கு விமர்சன, வசூல் ரீதியில் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து, இயக்குநர் வெற்றிமாறன் தனது படக்குழுவில் உள்ள அனைவருக்கும் தங்கக் காசு பரிசளித்துள்ளார். படத்திற்கு இசை பெரும் பலமாக இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டியுள்ள நிலையில், படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்.

, : தமிழகத்  