நடிகை நயன்தாரா தனது குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்களை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
வாடகைத் தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர், புது வாழ்க்கையைத் தொடங்கியது போல் உணர்வதாகத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இரு மகன்களுக்கும் 'உயிர்', 'உலகம்' என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் கூறினார்.
இந்நிலையில், 'உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்' என மகன்களுக்கும் பெயர் சூட்டியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுபோன்ற வித்தியாசமான பெயர்களை எதிர்பார்க்கவில்லை என சமூக ஊடகங்களில் நயன்தாராவின் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரசிகர்களைப் போன்றே திரையுலகத்தினரும் விக்னேஷ், நயன்தாரா தம்பதியர்க்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.