சமந்தா: வயதை வெளியே சொல்லாதீர்கள்

சமந்தா: வயதை வெளியே சொல்லாதீர்கள்

2 mins read
4021791b-f2cd-4dda-998e-e05492e7da8a
-

சமந்­தா­வின் நடிப்­பில் குண­சே­கர் இயக்கி இருக்­கும் படம்

'சாகுந்­த­லம்'. இந்­தப் படத்­தின் விளம்­பர நிகழ்ச்சி கொச்­சி­யில் நடை­பெற்­றது. அப்­போது மேடை­யில் சமந்­தா­விற்கு ஜோடி­யாக நடித்­தி­ருந்த நடி­கர் பேசிய பேச்­சைக் கேட்டு அதிர்ந்­து­போன சமந்தா இது­போல் மேடை­யில் பேசக்­கூ­டாது என்று அன்­பா­கக் கண்­டித்­தி­ருக்­கி­றார்.

'சாகுந்­த­லம்' படத்­தில் கதா­நா­ய­க­னாக மலை­யாள திரை­யு­லகைச் சேர்ந்த தேவ் மோகன் நடித்­துள்­ளார். முக்­கிய வேடங்­களில் அதிதி பாலன், பிர­காஷ்­ராஜ், மது­பாலா உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.

இந்த படம் இன்­னும் பத்து நாள்­களில் வெளி­யா­வ­தால் படத்தை விளம்­ப­ரம் செய்­யும் நிகழ்ச்­சி­க­ளுக்கு படக்­கு­ழு­

வி­னர் ஏற்­பா­டு­க­ளைச் செய்து வரு­கின்­ற­னர். சமந்­தா­வும் அந்த நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொண்டு வரு­கி­றார்.

இந்­தப் படம் தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம், இந்தி ஆகிய மொழி­களில் வெளி­யா­வ­தால் அந்­தந்த பகு­தி­க­ளுக்­குச் சென்று விளம்­பர நிகழ்ச்­சி­களை நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் கேரளாவில் விளம்பரம் செய்ய கொச்­சி­யில் விளம்­பர நிகழ்ச்­சி­க்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் படத்­தின் நாய­கன் தேவ் மோகன் பேசு­கை­யில், "நான் கல்­லூ­ரி­யில்

படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது 'நான் ஈ' படம் வெளி­யா­னது. அந்­தப் படத்­தில் நடித்­தி­ருந்த சமந்­தா­வின் நடிப்­பை­யும் அழ­கை­யும் பார்த்து பிர­மித்து போனேன். அப்­போதே நான் அவ­ரு­டைய ரசி­க­ரா­னேன். இப்­போது அவ­ரு­டன் இணைந்து ஜோடி­யாக நடித்­துள்­ளேன் என்­பதை என்­னால் நம்ப முடி­ய­வில்லை," என்று கூறி­னார்.

அதற்கு பின் பேசிய சமந்தா, "இப்­படி பொது இடங்­களில் வயதை வெளிப்­ப­டுத்­தும் வித­மாக பேசக்­கூ­டாது,'' என தேவ் மோக­னுக்கு நகைச்­சு­வை­யு­டன் ஓர் எச்­ச­ரிக்கை கலந்த வேண்டு­கோளை பல­ரின் முன்னே வைத்­தார்.

அப்­போ­து­தான் பல­ருக்­கும் நடிகை சமந்­தா­வுக்கு வயது 35 என்­ப­தும் நாய­கன் தேவ் மோக­னுக்கு 30 வய­து­தான் ஆகிறது என்­ப­தும் தெரி­ய­வந்­தது. சமந்தா அதைப்­பற்றி பேசா­மல் இருந்­தி­ருக்­க­லாம். ஆனால் பல­ரின் முன்னே நகைச்­சு­வை­யு­டன் பேசி பல­ரின் கைத்­தட்­டல்­க­ளை­யும் பெற்­றார்.

இவர் அண்­மைக்­கா­ல­மாக நாய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள படங்­களில் நடித்து வரு­கி­றார். அதன்­படி 'ரெயின்போ' என்ற படத்­தி­லும் சமந்தா நடிப்பதாக சென் ஆண்டே அறிவிக்கப்பட்டது.

ஆனால் சமந்தா கைநி­றைய படங்­கள், 'சிடா­டெல்' என்ற இணை­யத்­தொ­டர் ஆகி­ய­வற்­றில் தொடர்ந்து நடித்து வரு­வ­தால் 'ரெயின்போ' படத்­திற்­காக இயக்­கு­நர் கேட்ட நாள்­களை ஒதுக்க முடி­யா­த­தால் படத்­தில் இருந்து வெளி­யே­றி­னார்.

அந்த வாய்ப்பு தற்­பொ­ழுது நடிகை ராஷ்­மிகா மந்­த­னா­

விற்­குச் சென்­றுள்­ளது. 'ரெயின்போ' படத்­தின் பூஜை திங்­கள்­கி­ழமை நடந்­தது. அப்­பொ­ழுது எடுக்­கப்­பட்ட புகைப்­

ப­டங்­களை சமூக வலைத்­த­ளத்­தில் வெளி­யிட்டு தன் மகிழ்ச்­சியை ரசி­கர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­டார் ராஷ்­மிகா. அதைப் பார்த்த சமந்தா வாழ்த்து தெரி­வித்து பதி­விட்டு இருந்தார்.

சமந்­தா­வின் பதி­வைப் பார்த்த ரசி­கர்­கள் செல்­ல­மாக, "சம்­மு­விற்­குத்­தான் எவ்­வ­ளவு பெரிய மனது. தான் நடிக்க வேண்­டிய படத்­தில் ராஷ்­மிகா மந்­தனா நடிக்­கி­றார் என்று தெரிந்­தும் வாழ்த்­தி­யி­ருக்­கி­றார். இந்த நல்ல மன­சுக்­கு­தான் அவ­ரின் திரை­யு­லக வாழ்க்கை எப்­பொ­ழு­துமே உச்­சத்­தில் இருக்­கிறது," என்று பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

சமந்தா 'சாகுந்­த­லம்' படத்­தின் வெளி­யீட்­டுக்­கா­க ஆவலுடன் காத்­தி­ருக்­கி­றார்.