'ராம்' படத்தின் இரண்டு பாகங்களில் திரிஷா

'ராம்' படத்தின் இரண்டு பாகங்களில் திரிஷா

1 mins read
f296ef1e-5ee4-4703-8a01-f941e853f9f7
-

'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்தது முதல், பலரும் குந்தவை என்றே கூப்பிடும் அளவிற்கு நடை, உடை, பாவனைகளுடன் பவனி வருகிறார் திரிஷா.

இவர் அடுத்து 'ராம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ராம்'. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மோகன்லால், திரிஷா, சம்யுக்தா மேனன், சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 45 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் 25 நாள்கள் துனிஷியா, 10 நாள்கள் பிரிட்டன், 10 நாள்கள் டெல்லியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

திரிஷா முக்கிய வேடத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமும் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை திரிஷா, விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

2023 ஆண்டுக்கான 'ஜேஎஃப்டபில்யூ' 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவையாக நடித்த திரிஷாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இந்தப் படத்தில் நடித்ததற்காக பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் திரிஷா.