'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் முக்கிய வேடத் தில் நடித்துவருகிறார் என்பது தெரிந் ததே. இப்படத்தின் முதல்கட்ட படப் பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. இப்படத்தில் நடிக்கும் நான்கு வில்லன்களில் ஒருவராகத் தோன்றும் அர்ஜுன் படத்தில் சிறப்பான 'சம்பவம்' இருக்கும் என்று கூறியுள்ளார். விஜய்யுடன் முதன்முதலாக அஜித்தும் நடிக்க உள்ளார். பொதுவாக அர்ஜுன் இதுவரை தலை அலங்காரம், தோற்றத் தில் எந்த மாற்றமும் செய்தது இல்லை. ஆனால், 'லியோ' படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் முடி கொஞ்சம் வளர்த்த படியும் கண்ணில் ஒட்டு வில்லைகளு டனும் அர்ஜுன் தோன்றலாம் எனக் கூறப்படுகிறது.
'லியோ' படத்தில் சிறப்பான சம்பவம்
1 mins read
-

