வெற்றிநடை போடும் 'விடுதலை' திரைப்படம்

வெற்றிநடை போடும் 'விடுதலை' திரைப்படம்

2 mins read
f03ed1cc-2bda-403f-8753-443fc90031af
-

ஆ. விஷ்ணு வர்­தினி

ஒரே கொள்­கை­களை நிலை­நாட்டு­வ­தற்கு வெவ்­வேறு ஆயு­தங்­களை ஏந்தி வெவ்­வேறு பாதை­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பதே 'விடு­தலை' படத்தின் கதைக்கரு. அற­நெ­றி­க­ளி­லும் அற­நெ­றி­களைக் கடைப்­பி­டிப்­ப­தி­லும் கறுப்பு வெள்ளை இல்லை என்­பதைக் காட்­டும் பல அண்­மைய அர­சி­யல் அதி­ரடி திரைப்­ப­டங்­களில் ஒன்­றாக உரு­வாகி உள்ளது 'விடு­தலை'. 1980களில் தமி­ழ­கத்­தில் எழுந்­துள்ள 'தமி­ழர் மக்­கள் படை' எனும் இயக்­கத்­தைச் சுற்றி கதை பின்­னப்­பட்டுள்­ளது.

இது­போன்ற கதைக் கருக்­கள் கொண்ட திரைப்­ப­டங்­கள் அதி­கம் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன. இவை பல வகை­களில் ஒத்­தி­ருக்­கின்­றன. ஒன்­றோ­டொன்று போட்­டி ­போட்­டுக் கொள்­ள­வும் செய்­கின்­றன. இயக்­கு­நர் வெற்­றி­மா­ற­னின் விடு­த­லையோ, அவ­ரின் பாணிக்­கேற்ப கதா­பாத்­தி­ரங்­க­ளின் குணா­திச­யங்­களை இயல்­பாக சித்தி­ரித்து தனித்­து­வம் கொண்­டி­ருக்­கிறது.

நடி­கர் சூரி முதன்மைக் கதா­பாத்­தி­ரம் ஒன்­றில் நடித்­துள்­ளார். திரைப்­ப­டத்­தில் லட்­சி­ய­வா­தி­யாக இருக்­கும் கடை­மட்­டக் காவ­ல­ரான அவ­ரின் பார்­வை­யிலேயே பெரும்­பான்­மை­யான படம் அமைந்­துள்­ளது. நகைச்­சுவையை மட்­டு­மன்றி தீவிர உணர்­வு­க­ளை­யும் அவர் நய­மாக காட்­டி­யுள்­ளது திரைப்­ப­டத்­துக்குப் பெரிய பலம்.

சரி, தவறு குறித்து மெல்ல மெல்ல புரிந்­து­கொண்டு மனி­தர்­க­ளின் மறு­மு­கத்­தை­யும் வாழ்­வின் மறு­பக்­கத்­தை­யும் தெரிந்து­கொள்­ளும் நம்­மைப்போன்ற இயல்பு நப­ராக எழு­தப்­பட்­டுள்ள சூரி­யின் 'கும­ரே­சன்' கதா­பாத்­தி­ரம் மனதை வெல்­கிறது. தமி­ழர் மக்­கள் படை­யின் தலை­வ­ராக நடித்­துள்ள விஜய் சேது­பதியை அடுத்த பாகத்­தில் கூடு­த­லாக காண­லாம். வன்­முறைக் காட்­சி­களில் சீறும் அவர், மற்ற எல்லா இடங்­க­ளி­லும் சல­ன­மற்று நடித்­துள்­ளார்.

நிறை­கள் இருக்க, இத்­தகைய திரைப்­ப­டங்­கள் கொண்­டுள்ள முக்­கிய குறை ஒன்றினை­யும் 'விடு­தலை' திரைப்­ப­டம் கொண்­டுள்­ளது என தோன்­றி­யது. மாசு­பட்ட ஜன­நா­யக ஆட்சி­மு­றை­யின் சிக்­கல்­க­ளுக்­குத் தீர்வு பொது­வு­டை­மைக் கொள்­கையே என்­பதை மேம்­போக்­காக இத்­தி­ரைப்­ப­டம் முன்­வைக்­கிறது. அதனை மகி­மைப்­ப­டுத்­த­வும் செய்­கிறது. கூடு­தல் சார்­பின்­மை­யோடு இதனை அணு­கி­யி­ருக்­க­லாம்.

தமி­ழர் மக்­கள் படை­யின் தீவிர கொள்­கை­களை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­கென்றே காவ­லர்­கள் மக்­க­ளி­டத்­தில் புரி­யும் வன்­கொ­டுமை மிகைப்­ப­டுத்­திக் காட்­டப்­பட்­டது போன்ற உணர்­வும் ஏற்­ப­டா­மல் இல்லை. எனி­னும், இது இரண்­டா­வது பாகத்­தில் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

திரைப்­ப­ட உல­கத்­துக்கே நம்மைக் கொண்டு செல்­லும் 'விடு­த­லை'­யின் சிறப்­பான படப்­பி­டிப்பு குறிப்­பி­டத்­தக்­கது. ஐந்து நிமி­டங்­க­ளுக்­கும் மேல் நீடித்த வெட்­டு­க­ளில்லா விபத்­துக் காட்சி திரைப்­ப­டத்­தைத் துவக்கி வைக்­கிறது. தொய்­வின்றி அமைக்­கப்­பட்ட இக்­காட்­சிக்­கான உழைப்பு மகத்­தா­னது.

ஜெய­மோ­க­னின் 'துணை­வன்' எனும் சிறு­க­தை­யைத் தழு­வி­யுள்­ளது விடு­தலை திரைப்­படம். 'வட­சென்னை' திரைப்­ப­டத்­தின் அதி­ரடிக் காட்­சி­கள், 'அசுரன்' திரைப்­ப­டத்­தின் காதல் காட்­சி­கள் ஆகி­ய­வற்­று­டன் ஒப்பி­டக்­கூ­டிய சாயல்­கள் 'விடுதலை'­யி­லும் தென்­ப­டு­கின்­றன. இயக்­கு­ந­ரின் முதல் பட­முயற்­சி­யான 'பொல்­லா­த­வன்' வெளி­வந்து 15 ஆண்டு­கள் ஆகின்­றன. அதி­ரடி திரைப்­ப­டங்­களில் தொடர்ந்து ஆழ­மான தடம்­ப­திக்­கும் இவ­ரின் 'விடு­தலை' பாகம் இரண்­டுக்­கான ஆர்­வத்தை பாகம் ஒன்று கட்­டா­யம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. vishnuv@sph.com.sg