தனது சிறு வயது கனவு நிறைவேறி உள்ளதாகச் சொல்கிறார் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி புகழ் ஆரவ். இவர் நடிக்கும் புதிய படம் 'மாருதி நகர் காவல் நிலையம்'. தயால் பத்மநாபன் இயக்குகிறார்.
முதன் முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆரவ். இதுதான் அவரது நீண்டகால கனவாம்.
"சிறு வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்தேன். ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்றால் நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று என் நண்பர்கள் அடிக்கடி கூறுவர். எதையும் சந்திக்கத் தயார் என்று அவர்களிடம் கூறுவேன்.
"ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற வேகத்துடன் மூன்று ஆண்டுகள் அதற்காக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டேன். தொடக்க நிலை தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். எனினும் மாடலிங் துறையில் வாய்ப்புகள் தேடிவந்தபோது, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
"விளம்பரப் படங்கள், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி, திரைப்பட வாய்ப்புகள் என அடுத்தடுத்து எனது கவனம் சிதறிவிட்டது. அதனால் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவும் கைநழுவிப் போனது," என்று கடந்த காலத்தை நினைவுகூர்கிறார் ஆரவ்.
நிஜ வாழ்க்கைக் கனவு நிறைவேறாமல் போனாலும், திரையுலகில் காவல்துறை அதிகாரியாக மாறியுள்ளார். 'மாருதிநகர் காவல் நிலையம்' படத்துக்காக காவல்துறைக்கான சீருடையை அணிந்தபோது இனம்புரியாததோர் உற்சாக உணர்வும் மனநிறைவும் ஏற்பட்டதாகச் சொல்கிறார்.
"இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே அந்த உற்சாகம் வந்துவிட்டது. படப்பிடிப்பின் முதல் நாளன்று காவல் நிலையம் போன்ற அரங்கில் முதல் காட்சியைப் படமாக்கினர். அந்த நாளை என் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது.
"அந்தச் சீருடையை எப்போதும் அணிந்திருக்க விரும்பினேன். படப்பிடிப்பு முடிவடைந்து தங்கு விடுதி அறைக்குத் திரும்பிய பிறகும்கூட சீருடையை அவிழ்க்க மனம் வராது. குறைந்தது ஒரு மணி நேரத்துக்குப் பிறகே தயக்கத்துடன் வேறு உடைக்கு மாறுவேன். கிட்டத்தட்ட இருபது நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தச் சமயத்தில் நான் விரும்பியபடி, கற்பனையில் காவல்துறை அதிகாரியாக வலம் வந்தேன்," என்கிறார் ஆரவ்.
படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் இயக்குநரின் அனுமதியைப் பெற்று, தாம் அணிந்து நடித்த சீருடையை நினைவுப் பரிசாக வாங்கிக்கொண்டாராம். இப்போது ஆரவ் வீட்டில் அந்தக் காக்கிச்சட்டை தனிக் கவனிப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
'மாருதி நகர் காவல் நிலையம்' படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்துள்ளளார் வரலட்சுமி. கதைப்படி இவரும் காவல்துறை அதிகாரிதானாம். இயக்குநர் கதையை விவரித்த ஒரு வாரத்திலேயே படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
காவல்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேச வேண்டும்; அதன் மூலம் திரட்டும் தகவல்களைக் கொண்டு நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால் ஒரே வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் ஆரவ்வால் யாரையும் சந்திக்க முடியவில்லை.
"எனினும் இயக்குநர் எனது பணியை எளிதாக்கிவிட்டார். அவர் கூறியபடி நடித்தேன். பின்னர் திரையில் என்னைப் பார்த்தபோது எனக்கே வியப்பாக இருந்தது. காவல்துறை அதிகாரிக்குரிய மிடுக்குடன் நடித்திருப்பது மனநிறைவைத் தந்துள்ளது. ரசிகர்களும் பாராட்டுவார்கள் என நம்புகிறேன்," என்கிறார் ஆரவ்.
படப்பிடிப்பின்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் உடன் நடித்த மூத்த கலைஞர்களுடன் பேசி மகிழ்ந்ததாகவும் ஒரு குடும்பமாக அனைவரும் பேசிப் பழகியதாகவும் சொல்கிறார்.
"சில சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தன. உதாரணமாக படப்பிடிப்பின்போது ஒருவரைப் பார்த்து என்ன வேலை செய்கிறார் என விசாரித்தேன். அதற்கு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளேன் என்றார். பிறகுதான் அவர் காவல்துறை அதிகாரி என்பதே தெரியவந்தது.
"அவரிடம் நிறைய பேசினேன். அவரது பணி சார்ந்த அனுபவங்களையும் கேட்டறிந்தேன். எனது கனவை திரையில் நிறைவேற்றிய இயக்குநருக்கும் தயாரிப்பாளருக் கும் நன்றி," என்கிறார் ஆரவ்.
, :
தமிழகத்

