திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

1 mins read

 தோனி தயாரிக்கும் தமிழ்ப் படத்துக்கு 'எல்ஜிஎம்' (Lets Get Married என்பதன் சுருக்கம்) எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் இவானா நாயகியாகவும் நடிக்கின்றனர். இ்ந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வேளையில் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிக்கு தோனி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பாம்.

 'நட்பே துணை' படத்தை அடுத்து மீண்டும் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்துள்ளார் இளம் நாயகி அனகா. இந்தப் புதிய படத்தை ஆதியே தயாரித்து இயக்கவும் செய்கிறார். படத் தலைப்பு மிக விரைவில் அறிவிக்கப்படுமாம். அதற்கு முன்னதாகவே சென்னையில் முதல்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.

 வேலூரைச் சேர்ந்த சாய் ரோஹினி தாதியர் படிப்பை முடித்துள்ளார். எனினும் சினிமா மீதான ஆர்வத்தால் கோடம் பாக்கத்துக்கு வந்துவிட் டார். 'நாட் ரீச்சபிள்' என்ற படத்தி்ல அறிமுகமான அவருக்கு 'துச்சாதனன்', 'மிடில் கிளாஸ்' உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. "பெற்றோ ரின் விருப்பத்திற்காகத் தாதியர் படிப்பை மேற்கொண்டேன். அது மிக உன்னதமான பணி. எனினும் திரையுலகில் அதிகம் பிரகாசிக்க முடியும் என நம்புகிறேன். வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல், எங்கெல்லாம் நடிப்புத் தேர்வு நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் நேரில் சென்று எனது திறமையை நிரூபித்து வாய்ப்புகளைப் பெறுகிறேன்," என்கிறார் சாய் ரோஹினி.