'வெற்றி தந்த வெற்றியை தக்க வைத்துக்கொள் சூரி'

'வெற்றி தந்த வெற்றியை தக்க வைத்துக்கொள் சூரி'

4 mins read
0cbdd55b-abe0-45c8-a1bb-8da76d19489f
-

அண்­மை­யில் 'விடு­தலை' படத்­தின் வெற்­றி­விழா நடை­பெற்­றது. அந்த நிகழ்­வில் பேசிய விஜய் சேது­பதி, "இந்த வெற்றி சூரிக்­கா­னது. வெற்றி சார் உனக்­காக கொடுத்­தது. இனி நீ அடுத்­

த­டுத்து செய்­யப்­போ­கிற விஷ­யங்­களில் மிக­வும் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும்," என்று அறி­வுரை கூறி­னார்.

'விடு­தலை' திரைப்­ப­டம் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்பை பெற்­றி­ருக்­கும் நிலை­யில், படக்­கு­ழு­வி­னர் சார்­பில் 'நன்றி நவி­ழும் நிகழ்வு' சென்னை தேனாம்­பேட்­டை­யில் அண்­மை­யில் நடை­பெற்­றது. இதில் இயக்­கு­நர் வெற்­றி­மா­றன், நடி­கர்­கள் விஜய் சேது­பதி, சூரி, நடிகை பவானி ஸ்ரீ, தயா­ரிப்­பா­ளர் எல்­ரட் குமார் உள்­ளிட்ட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

இதில் நடி­கர் விஜய் சேது­பதி படத்­தில் பணி­யாற்­றும்­போது இயக்­கு­நர் வெற்­றி­மா­ற­னு­டன் தனக்கு கிடைத்த அனு­ப­வங்­கள், சூரி­யு­ட­னான தன் நட்பு என பல விஷ­யங்­கள் குறித்து விவ­ர­மாக பேசி­னார்.

"'விடு­தலை' படம் வெளி­யான அன்று காலை­யில வெற்றி சார் என்­னைத் தொடர்­பு­கொண்டு, 'சேது, என்­னு­டைய தொல்­லை­களை எல்­லாம் பொறுத்­துக்­கொண்டு நடித்­த­தற்கு மிக­வும் நன்றி. படம் எல்­லா­ருக்­கும் பிடித்­தி­ருக்­கிறது என்ற செய்தி வந்­து­கொண்டே இருக்­கிறது,' என்­றார். இப்­படி ஓர் இனி­மை­யான செய்தி கடை­சி­யாக எந்­தப் படத்­திற்கு கிடைத்தது என்று நினை­வில்லை. இந்­தப் படம் முழு­வ­தும் வெற்றி சார்­தான் நிறைந்­தி­ருக்­கி­றார்.

"எந்­தப் படத்தை வேண்­டு­மா­னா­லும் ஒரு­வர் எடுக்­க­லாம், எந்­தக் கருத்தை வேண்­டு­மா­னா­லும் மக்­க­ளுக்கு சொல்­ல­லாம். ஆனால், பணம் போடும் தயா­ரிப்­பா­ள­ருக்கு அந்­தப் பணம் திருப்பி கிடைக்­க­வேண்­டும் என்ற மிகப்­பெ­ரிய பொறுப்­

போ­டு­தான் வெற்றி செயல்

­ப­டு­வார்.

"பொது­வாகவே ஓர் இயக்­கு

­ந­ரின் நட­வ­டிக்­கை­தான் எனக்கு உற்­சா­கத்­தைக் கொடுக்­கும். வாத்­தி­யார் - சுனில் மேனன் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு இடை­யே­யான காட்­சி­க­ளைப் பட­மாக்­கும்­போது வெற்றி மிக­வும் பர­ப­ரப்­பாக இருந்­தார். அந்த பர­ப­ரப்பு, எனக்­கும் அப்­ப­டியே தொற்றிக்கொண்டது. அத­னால் என்­னால் சரி­யாக நடிக்க முடி­ய­வில்லை என்று அவரிடம் சொன்­னேன்.

"அதன்­பி­றகு கொஞ்­சம் நிதா­ன­மாக அந்­தச் சூழ­லைப் படம்­பி­டிக்­கத் தொடங்­கி­னார். அத­னு­டைய வெளிப்­பா­டு­தான் காவல் நிலை­யக் காட்சி. அந்­தக் காட்சி எப்­படி வர வேண்­டும் என்­பதை எனக்கு உணர்த்த, அதை வெற்றி சார் எனக்கு முத­லில் நடித்­துக் காண்­பித்­தார். அப்­போது அவ­ரு­டைய அந்த வெளிப்­பாட்டைப் பார்த்து நான் பயந்­து­விட்­டேன். அதை அப்­

ப­டியே என்­னால் நடிக்க முடி­ய­வில்லை. இருந்­தா­லும், என் அள­வுக்கு என்­னு­டைய காட்­சியை நடித்­துக்­கொ­டுத்­தேன்.

"பொது­வாவே படப்­பி­டிப்பு இடங்­களில் சில கஷ்­டங்­கள் இருக்­கும். இந்­தப் படத்­தி­லும் அப்­படி இருந்­தது. உதா­ர­ணத்­திற்கு படப்­பி­டிப்பு முடி­வ­தற்கு முன்­பாக நம்மை பாம்பு கடித்து­வி­டும் என்று பல தடவை நினைத்து பயந்­தி­ருக்­கி­றேன். அதை­யும் வெற்­றி­யி­ட­மும் சொல்லி இருக்­கி­றேன். அப்­படி ஒரு காட்­டுப் பகு­தி­யில் படப்­

பி­டிப்பு நடந்­தது. எப்­ப­டியோ தப்­பித்­து­விட்­டேன். நடிகன் என்றால் இதுபோன்ற எல்லாவற்றிலும் ஈடுபடவேண்டும்.

"நான் வெற்றி சாரி­டம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு, அவ­ரது பதில்­களும் அதற்கு அவ­ரது வெளிப்­பா­டு­களும் அதன்­வ­ழியே நான் எடுத்­துகொண்டதும்தான் வாத்­தி­யார் கதா­பாத்­தி­ரம்.

"இந்­தப் படத்தை பார்த்த பல­ரும், விஜய் சேது­ப­தியை தனி­யா­க­வும் வாத்­தி­யார் கதா­பாத்­தி­ரத்­தைத் தனி­யா­க­வும் பேசு­வ­தைப் பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது.

"ஏனென்­றால் நான் வாத்­தி­யார் இல்லை. எனக்கு அந்த அறிவு கிடை­யாது. அந்த

வாத்­தி­யா­ரென்­பது, வெற்­றி­

மா­றன்­தான். நான் வெற்­றி­யின் கைப்­பிடி. அந்த வகை­யில், அவ­ரு­டைய சிந்­த­னையை வெளியே சொன்­ன­து­தான் நான். நான் பெண்­ணாக இருந்­தி­ருந்­தால் அவ­ரைக் காத­லித்­தி­ருப்­பேன்.

"சூரி பற்றி பேசா­மல் இந்த மேடையை கடந்­து­போக முடி­யாது. 'வெண்­ணிலா கப­டிக்­குழு' படத்­தில் நடிக்­கும்­போது, இரண்டு பேரும் சைதாப்­பேட்­டை­யில் இரவு 2 மணிக்கு பேசிக்­கொண்டே நடந்­தி­ருக்­கி­றோம். அன்­றி­லி­ருந்து இன்று வரை­யும் அந்த நட்பு தொடர்­கிறது.

"ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன் ஒரு­முறை சூரி­யி­டம், 'உனக்கு நம்ம ஊர் முகம் இருக்கு. இப்­ப­டியே இருந்துவி­டாதே! உனக்­குள் நிறைய இருக்­கிறது. அதை வெளி­க்காட்­டிக்­கொண்டே இரு,' என்­றேன்.

"வண்­டி­மாடு எப்­போ­தும் ஒரே வழி­யில் சென்­று­கொண்டே இருக்­கும். சிந்­திக்­காது. அதி­லி­ருந்து வெளியே வரு­வது மிக­வும் கடி­னம். சூரி சிந்­தித்து, பல மனப்­போ­ராட்­டங்­க­ளைக் கடந்து வந்து இந்­தப் படத்­தில் வேலை செய்­தி­ருக்­கி­றார்.

"இந்த வெற்றி, உனக்­கா­னது. இந்த வெற்றி, வெற்றி சார் உனக்­காக கொடுத்­தது. இனி நீ அடுத்­த­டுத்து செய்யப் போகிற விஷ­யங்­களில் மிக­வும் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும். ஏனென்­றால் இப்­போது இந்த வெற்­றியை வைத்து ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொன்று சொல்­வார்­கள். அதில் எது தேவை? யார் சொல்­கி­றார்­கள்? எதை எடுத்­துக்கொள்ளலாம்? எதை ஒதுக்­க­லாம்? என்று கவ­ன­மாக இருக்­க­வேண்­டும்.

"இந்த காடு வேல்­ரா­ஜின் கட்­டுப்­பாட்­டில்­தான் இருந்­தது என்று 'விடு­தலை 2' படம் வரும்­போது, உங்­க­ளுக்­குத் தெரி­

ய­வ­ரும். அந்­தக் காட்­டின் அர­சன் வேல்­ராஜ்! 'லவ் யூ' வேல்­ராஜ்!

"இந்­தப் படம், கண்­டிப்­பாக என் நினை­வில், கல்­வெட்­டில் பொறித்த அனு­ப­வ­மாக இருக்­கும். நன்றி," என்­றார் வாத்­தி­யா­ராக நடித்­தி­ருந்த விஜய் சேது­பதி.

படப்பிடிப்பின்போது நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி.