அண்மையில் 'விடுதலை' படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி, "இந்த வெற்றி சூரிக்கானது. வெற்றி சார் உனக்காக கொடுத்தது. இனி நீ அடுத்
தடுத்து செய்யப்போகிற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்," என்று அறிவுரை கூறினார்.
'விடுதலை' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படக்குழுவினர் சார்பில் 'நன்றி நவிழும் நிகழ்வு' சென்னை தேனாம்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, நடிகை பவானி ஸ்ரீ, தயாரிப்பாளர் எல்ரட் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் விஜய் சேதுபதி படத்தில் பணியாற்றும்போது இயக்குநர் வெற்றிமாறனுடன் தனக்கு கிடைத்த அனுபவங்கள், சூரியுடனான தன் நட்பு என பல விஷயங்கள் குறித்து விவரமாக பேசினார்.
"'விடுதலை' படம் வெளியான அன்று காலையில வெற்றி சார் என்னைத் தொடர்புகொண்டு, 'சேது, என்னுடைய தொல்லைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு நடித்ததற்கு மிகவும் நன்றி. படம் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது என்ற செய்தி வந்துகொண்டே இருக்கிறது,' என்றார். இப்படி ஓர் இனிமையான செய்தி கடைசியாக எந்தப் படத்திற்கு கிடைத்தது என்று நினைவில்லை. இந்தப் படம் முழுவதும் வெற்றி சார்தான் நிறைந்திருக்கிறார்.
"எந்தப் படத்தை வேண்டுமானாலும் ஒருவர் எடுக்கலாம், எந்தக் கருத்தை வேண்டுமானாலும் மக்களுக்கு சொல்லலாம். ஆனால், பணம் போடும் தயாரிப்பாளருக்கு அந்தப் பணம் திருப்பி கிடைக்கவேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்
போடுதான் வெற்றி செயல்
படுவார்.
"பொதுவாகவே ஓர் இயக்கு
நரின் நடவடிக்கைதான் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். வாத்தியார் - சுனில் மேனன் கதாபாத்திரங்களுக்கு இடையேயான காட்சிகளைப் படமாக்கும்போது வெற்றி மிகவும் பரபரப்பாக இருந்தார். அந்த பரபரப்பு, எனக்கும் அப்படியே தொற்றிக்கொண்டது. அதனால் என்னால் சரியாக நடிக்க முடியவில்லை என்று அவரிடம் சொன்னேன்.
"அதன்பிறகு கொஞ்சம் நிதானமாக அந்தச் சூழலைப் படம்பிடிக்கத் தொடங்கினார். அதனுடைய வெளிப்பாடுதான் காவல் நிலையக் காட்சி. அந்தக் காட்சி எப்படி வர வேண்டும் என்பதை எனக்கு உணர்த்த, அதை வெற்றி சார் எனக்கு முதலில் நடித்துக் காண்பித்தார். அப்போது அவருடைய அந்த வெளிப்பாட்டைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். அதை அப்
படியே என்னால் நடிக்க முடியவில்லை. இருந்தாலும், என் அளவுக்கு என்னுடைய காட்சியை நடித்துக்கொடுத்தேன்.
"பொதுவாவே படப்பிடிப்பு இடங்களில் சில கஷ்டங்கள் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படி இருந்தது. உதாரணத்திற்கு படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாக நம்மை பாம்பு கடித்துவிடும் என்று பல தடவை நினைத்து பயந்திருக்கிறேன். அதையும் வெற்றியிடமும் சொல்லி இருக்கிறேன். அப்படி ஒரு காட்டுப் பகுதியில் படப்
பிடிப்பு நடந்தது. எப்படியோ தப்பித்துவிட்டேன். நடிகன் என்றால் இதுபோன்ற எல்லாவற்றிலும் ஈடுபடவேண்டும்.
"நான் வெற்றி சாரிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவரது பதில்களும் அதற்கு அவரது வெளிப்பாடுகளும் அதன்வழியே நான் எடுத்துகொண்டதும்தான் வாத்தியார் கதாபாத்திரம்.
"இந்தப் படத்தை பார்த்த பலரும், விஜய் சேதுபதியை தனியாகவும் வாத்தியார் கதாபாத்திரத்தைத் தனியாகவும் பேசுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
"ஏனென்றால் நான் வாத்தியார் இல்லை. எனக்கு அந்த அறிவு கிடையாது. அந்த
வாத்தியாரென்பது, வெற்றி
மாறன்தான். நான் வெற்றியின் கைப்பிடி. அந்த வகையில், அவருடைய சிந்தனையை வெளியே சொன்னதுதான் நான். நான் பெண்ணாக இருந்திருந்தால் அவரைக் காதலித்திருப்பேன்.
"சூரி பற்றி பேசாமல் இந்த மேடையை கடந்துபோக முடியாது. 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் நடிக்கும்போது, இரண்டு பேரும் சைதாப்பேட்டையில் இரவு 2 மணிக்கு பேசிக்கொண்டே நடந்திருக்கிறோம். அன்றிலிருந்து இன்று வரையும் அந்த நட்பு தொடர்கிறது.
"ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை சூரியிடம், 'உனக்கு நம்ம ஊர் முகம் இருக்கு. இப்படியே இருந்துவிடாதே! உனக்குள் நிறைய இருக்கிறது. அதை வெளிக்காட்டிக்கொண்டே இரு,' என்றேன்.
"வண்டிமாடு எப்போதும் ஒரே வழியில் சென்றுகொண்டே இருக்கும். சிந்திக்காது. அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம். சூரி சிந்தித்து, பல மனப்போராட்டங்களைக் கடந்து வந்து இந்தப் படத்தில் வேலை செய்திருக்கிறார்.
"இந்த வெற்றி, உனக்கானது. இந்த வெற்றி, வெற்றி சார் உனக்காக கொடுத்தது. இனி நீ அடுத்தடுத்து செய்யப் போகிற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் இப்போது இந்த வெற்றியை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதில் எது தேவை? யார் சொல்கிறார்கள்? எதை எடுத்துக்கொள்ளலாம்? எதை ஒதுக்கலாம்? என்று கவனமாக இருக்கவேண்டும்.
"இந்த காடு வேல்ராஜின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்று 'விடுதலை 2' படம் வரும்போது, உங்களுக்குத் தெரி
யவரும். அந்தக் காட்டின் அரசன் வேல்ராஜ்! 'லவ் யூ' வேல்ராஜ்!
"இந்தப் படம், கண்டிப்பாக என் நினைவில், கல்வெட்டில் பொறித்த அனுபவமாக இருக்கும். நன்றி," என்றார் வாத்தியாராக நடித்திருந்த விஜய் சேதுபதி.
படப்பிடிப்பின்போது நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி.

