விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. அங்கு படக்குழுவினர் நிலநடுக்கம், கடும் குளிர் என பல கஷ்டங்களை அனுபவித்தனர்.
காஷ்மீரில் வெளிப்புற படப்பிடிப்பில் பல கஷ்டங்களை படக்குழு அனுபவித்ததால் இனி வெளிப்புற படப்பிடிப்பு வேண்டாம், அரங்கிலேயே படப்பிடிப்பை நடத்தலாம் என லோகேஷிடம் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து லோகேஷும் இதற்கு சம்மதம் தெரிவித்து
பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பைத் தொடர்ந்தது படக்குழு.
விஜய்யின் லியோ படப்பிடிப்பு பிரசாத் ஸ்டுடியோவில் நடை
பெறுகின்றது என்பதை அறிந்துகொண்ட விஜய்யின் ரசிகர்கள் ஸ்டுடியோவின் முன் தினமும் முற்றுகையிடத் தொடங்கி உள்ளனர்.
விஜய்யின் கார் ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்போது காரின் பின்னாலே அவரைப் பின்தொடர்கின்றனர். இதனால் விஜய் கடும் கோபத்தில் இருப்பதாக பிரபல பத்திரிகையாளார் பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்நிலைத் தொடர்ந்தால் நடிகர் விஜய் படப்பிடிப்பை சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு மாற்ற வாய்ப்பு இருக்கிறது என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'லியோ' படத்தின் பூஜையின்போது படத்தில் நடிக்கும் அர்ஜூன், விஜய், திரிஷா.

