ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர் கள், பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண நடிகை திரிஷாவும் நடிகர் சதீஷும் வந்திருந்தனர். தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபுவும் வருகை தந்த நிலையில், இவர்களைத் திடலில் இருந்த பெரிய திரையில் பார்த்தபோதெல்லாம் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். எனினும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி கண்டதால் திரிஷா சோகமாகிவிட்டார்.
அனைத்துப் படங்களுமே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திரை உலகத்தினர் கடுமையாக உழைக்கிறோம் என்கிறார் பூஜா ஹெக்டே.
எனினும் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை யாரும் முன்பே கணித்துவிட இயலாது என்றும் அனைத்தும் ரசிகர்களின் கையில்தான் உள்ளது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள் ளார். "இதுவரை சில வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். அது எனக்கு மனநிறைவை அளித்துள்ளது. எனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடிக்க முயற்சி செய்கி றேன். என்னால்கூட பக்கத்து வீட்டுப்பெண் மாதிரி காட்சி அளிக்க முடியும். அதேபோல நகரத்து நாகரிகப் பெண்ணாகவும் நடிக்க முடியும். சரித்திரக் காலத்து கதா பாத்திரங்களிலும் நடிப்பேன். எனக்கு தெய்வ பக்தி அதிகமில்லை. ஆனால் நம்மையெல்லாம் ஏதோ ஒரு பல மான சக்தி முன்னோக்கி அழைத்துச் செல்கிறது என் பதை மட்டும் உறுதியாக நம்புகிறேன்," என்கிறார் பூஜா.
திரைப்படங்கள், இணையத் தொடர்களுக்கு இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை என்றும் படப்பிடிப்புச் சூழல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார் ராஷி கன்னா.
எனினும் ஒரு படைப்பைத் திரையரங்குக்குச் சென்று நூற்றுக்கணக்கான ரசிர்கள் முன்னிலையில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது என்றும் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"திரையரங்கில் ரசிகர்களோடு அமர்ந்து திரையில் நம்மை நாமே பார்த்துக்கொள்வது மிகச்சிறந்த அனுபவம். எனவே திரைப்படங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பேன். அதேசமயம் ஓடிடி தளங்களாலும் பல நன்மைகள் உள்ளன. இணையத்தொடர்களில் நடிக்கும்போது பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் சூழலும் அமைகின்றன. நல்ல கதைக்கருக்களைத் தேர்வு செய்து பொறுமையாக நடிக்க முடியும்," என்கிறார் ராஷி கன்னா.
கால மாற்றங்களால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை விஷாகா சிங் தெரிவித்துள்ளார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் உரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள் ளார். "சில நிகழ்வுகள், விபத்துகள், உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பிறகு இந்த கோடைக்காலத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்," என்கிறார் விஷாகா.

