ஒற்றைத் தலைவலி உட்பட எத்தகைய உடல்நல பாதிப்பு என்றாலும் அதை அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்கிறார் மூத்த நடிகை மாளவிகா.
தனக்கு ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) பாதிப்பு இருந்ததாகவும் அதற்கு உரிய சிகிச்சை பெறாத காரணத்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர் கூறிஉள்ளார்.
ஏராளமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா. தொலைக்காட்சித் தொடர்களிலும் முத்திரை பதித்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்படும்போது அதை சாதாரணமாக கருதிவிடக் கூடாது என சமூக ஊடகங்களில் வழி இவர் அறிவுறுத்தி உள்ளார்.
"அலட்சியமாக இருந்தால் என்னைப்போல் நீங்களும் மருத்துவமனைப் படுக்கையில் படுத்துக்கிடக்க வேண்டியிருக்கும். ஒற்றைத் தலைவலி பிரச்சினையில் இருந்து விடுபட பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் சில மருந்துகளை உட்கொண்டேன். வழக்கமான வலி நிவாரணி, காய்ச்சல் மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டேன். ஆனால், பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.
"இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உரிய மருத்துவரைச் சந்தித்து உரிய நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும்," என்று மாளவிகா சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

