வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் புதுப் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் ஆஷ்னா ஜவேரி. இதில், தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு நாயகனாக நடிக்கிறார். பூசை போட்ட கையோடு, படப்பிடிப்பைத் தொடங்கி உள்ளனர். ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகிறதாம்.
"திரையுலகில் ஒன்பது ஆண்டுகள் சரியான வாய்ப்பு இன்றித் தவித்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் நடித்துள்ள 'கன்னித்தீவு' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன," என்கிறார் ஆஷ்னா.
பரிசுச் சீட்டை (லாட்டரி) மையமாக வைத்து 'பம்பர்' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித் துள்ளார் வெற்றி. பணத் துக்காக எதையும் செய்யும் நாயகன் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும்போது சில பிரச்சினைகளில் சிக்குவதும் அதில் இருந்து எப்படி விடுபடு கிறான் என்பதும்தான் கதை.
'அரண்மனை-4' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி உள்ளது. இதில் தமன்னா, ராஷி கண்ணா உட்பட மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் ராஷி கண்ணா. மேலும், படத்தின் நாயகனும் இயக்குநருமான சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றியது உற்சாகமான அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது '13' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் 'யூடியூபர்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கௌதம் மேனன் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாராம்.
பத்து மாதக் கைக்குழந்தை யுடன் பயணம் செய்த பெண் ணுக்கு லண்டன் விமான நிலையத்தில் நடிகர் அஜித் குமார் உதவிக்கரம் நீட்டி உள்ளார். அவரது செயல் பாட்டை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பாராட்டி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அந்தப் பெண் பயணியின் கணவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
"என் மனைவி கிளாஸ்கோ வில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நடிகர் அஜித் குமாரை அவர் சந்திக்க நேர்ந்தது.
"பயணப்பை, கைக் குழந்தைக்கான பையுடன் என் மனைவி பயணம் செய்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்த அஜித், என் மனைவி தனியாகப் பயணம் செய்ததை அறிந்து, விமா னம் வரை பயணப்பையைத் தூக்கிச்செல்ல அஜித் முன்வந்தார்.
"அவரது தன்னடக்கம் எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது," என்று அந்தப் பயணியின் கணவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு உதவ முன்வந்த அஜித்திடம் தாமே சமாளித் துக் கொள்வதாக அப்பெண் பயணி கூறியதற்கு, "இருக்கட்டும், எனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். குழந்தையுடன் பயணம் செய்வதன் சிரமம் பற்றி எனக்குத் தெரியும்," என்று சொன்னாராம் அஜித்.

