தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரை விழாக்களில் விருதுகளைக் குவிக்கும் 'காகிதம்' குறும்படம்

2 mins read
0eb71670-13dd-4557-a0c5-8c0fdc3156d6
-

இந்­தி­யா­வில் உரு­வா­கும் குறும்­படங்­கள் உல­க­ள­வி­லான திரைப் படைப்­பா­ளி­க­ளின் கவ­னத்தை ஈர்த்து வரு­கின்­றன.

இந்­திய குறும்­ப­டங்­கள் ஆஸ்­கர் விரு­து­க­ளைப் பெறும் அள­வுக்குத் தர­மான படைப்­பு­க­ளாக இருப்­பதே இதற்­குக் கார­ணம்.

அந்த வகை­யில் பல்­வேறு திரைப்­பட விழாக்­களில் திரை­யிடப்­பட்டு ஏரா­ள­மான விரு­து­களை வாரிக்குவித்து வரு­கிறது 'காகி­தம்' என்ற குறும்­ப­டம். இதை வினோத் வீர­மணி இயக்கி உள்­ளார்.

இக்­கு­றும்­ப­டத்­தின் குறு­முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு வெளி­யாகி உள்­ளது. நடி­கர் விஜய் சேது­பதி அதை வெளி­யிட்­டார்.

இது, வாழ்க்­கை­யின் யதார்த்­த­மான பகு­தி­யைப் படம்­பி­டித்­துக் காட்­டும் படைப்பு என்­கி­றார் இயக்­கு­நர் வினோத் வீர­மணி.

"இந்­தக் குறும்­ப­டம் நம் எண்­ணங்­க­ளைப் பிர­தி­ப­லிக்­கக் கூடிய தன்­மை­யி­லான கதை என்று கூற முடி­யாது. இது ஒரு கதை­யும் அல்ல, வாழ்க்­கை­யின் யதார்த்தம்.

"மனித வாழ்க்கை என்­பது ஒரு காகி­தம் போன்­றது. அந்­தக் காகி­தத்தை என்ன செய்ய வேண்­டும் என்ற கேள்வி எழு­கிறது. அதில் ஓவி­யம் தீட்­டு­வதா அல்லது எதை­யா­வது கிறுக்கி வைப்­பதா என்­பது அவ­ர­வர் மன­நி­லை­யைப் பொறுத்­தது.

"ஆறு வய­துச் சிறுமி தன்னைச்­ சுற்­றி­யுள்ள சூழலை எப்­படி அடை­யா­ளம் கண்­டு­கொள்­கி­றாள் என்­ப­தை­யும் தனக்­கான வாய்ப்புகளை எவ்­வாறு அமைத்­துக்கொள்­கிறாள் என்­ப­தை­யும் அல­சி­யுள்­ளோம்," என்­கி­றார் வினோத் வீர­மணி.

'ஓஷன்ஸ் ட்ராப்ஸ் புரொ­டக்­‌ஷன்ஸ்' சார்­பில் தீபா இஸ்­மா­யில் இக்­கு­றும்­ப­டத்தைத் தயா­ரித்­துள்­ளார். முக்­கி­ய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருக்­கும் சிறுமி மதி­ஹா­வின் நடிப்பு அருமை எனப் பல­ரும் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.

உரி­மை­யும் வெற்­றி­யும் இவ்­வு­ல­கில் உள்ள அனை­வ­ருக்­கும் சம­மா­னது என்ற கருத்தை 'காகிதம்' குறும்­ப­டம் வலியுறுத்து­வ­தா­கச் சொல்­கி­றார் தீபா.

இன்­றும்­கூட சமு­தா­யத்­தில் மிகச் சிறந்த ஆற்­ற­லும் அறி­வும் படைத்த பெரும்­பா­லான மக்­கள், குறைந்­த­பட்ச சமு­தாய மதிப்­பும் இல்­லாது வாழ்­வ­தாக இவர் ஆதங்­கப்­ப­டு­கி­றார்.

மேலும் பல திற­மை­சா­லி­கள் உரிய அடை­யா­ள­மும் கிடைக்­காமல் உழல்­வ­தா­க­வும் உரிமை கிடைக்­கா­மல் தவிப்­ப­தா­க­வும் சொல்­கி­றார் தீபா.

"சமு­தா­யத்­தின் மேல்­தட்­டுக்­கும் கீழ்த்­தட்­டுக்­கும் இடையே இருப்­பது ஒரு சிறு­கோடுதான். அது­தான் வறு­மைக்கோடு. மற்­ற­படி இங்கு அனை­வ­ரும் அனை­வருக்­கும் சமமே.

"இதன் அடிப்­ப­டை­யில் ஒரு கதையை உரு­வாக்கி அதை இயக்­கு­நர் வினோத் எங்­க­ளுக்கு விவ­ரித்த விதம் சிறப்­பாக இருந்­தது. இந்­தக் குறும்­ப­டம் சிறந்த படைப்­பாக உரு­வாகி உள்­ளது," என்­கி­றார் தயா­ரிப்­பா­ளர் தீபா இஸ்­மா­யில்.

இது­வரை 35 விரு­து­க­ளைப் பெற்­றுள்­ளது இக்­கு­றும்­ப­டம். சிறந்த குழந்தை நட்­சத்­தி­ரம், சிறந்த இயக்­கு­நர், சிறந்த குறும்­படம், சிறந்த கதை, சிறந்த பாடல் எனப் பல்­வேறு பிரி­வு­க­ளின் கீழ் இந்த விரு­து­கள் கிடைத்­துள்­ளன.

"கதை நாய­கி­யாக நடித்­துள்ள சிறுமி மதி­ஹா­வின் நடிப்பைக் கண்டு பாராட்­டா­த­வர்்­களே இல்லை.

"அச்­சி­று­மிக்கு அனைத்­து­லக அள­வில் விரு­து­களும் அங்­கீ­கா­ர­மும் கிடைக்­கும் என எதிர்­பார்ப்­ப­தாக 'காகி­தம்' குழு­வி­னர் கூறு­கின்­ற­னர்.