பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளதாம். இதில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்திய சுதந்திரத்துக்கு முன்பு கோலார் தங்க வயலில் தமிழர்களை அடிமைகளாக வைத்திருந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. இதில் விக்ரமின் தோற்றம் மிரள வைப்பதாக உள்ளது. அது தொடர்பான புகைப்படங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேல் சட்டை அணியாமல் வேட்டியை கோவணம்போல் கட்டிக்கொண்டு கையில் ஆயுதம் ஏந்தி மிடுக்காக விக்ரம் வரும் காட்சிகள் படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
தாம் யாரையும் காதலிக்க வில்லை என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனது திருமணம் குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பு கிறார்கள். நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் எனது திருமணம் குறித்து முன்கூட்டியே அறிவிப்பேன். நிச்சயமாக ரகசியத் திருமணம் நடக்காது," என்கிறார் கீர்த்தி.
திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகி விட்டதை தம்மால் நம்ப முடியவில்லை என்கிறார் டாப்சி. பல்வேறு இடையூறு களை எதிர்கொண்டாலும் கதை தேர்வில் முதலில் தடுமாறினாலும் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை அடைந் துள்ளதாக சமூக ஊடகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். "தென்னிந்திய படங்கள் மூலம் முன்னணி நடிகையானாலும் மனநிறைவு கிடைக்க வில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக இந்திப் படங்களில் நடித்தேன்," என டாப்சி கூறியுள்ளார்.

