தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'இதுவரை காணாத அவதாரத்தில் இருப்பார் ரஜினி'

1 mins read
a860a18c-1b58-4469-8a4e-ae392cce0eb0
'ஜெய்லர்' படத்தில் ரஜினி. படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா -

'ஜெய்லர்' படத்தில் சூப்பஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை தாம் நடித்த 168 படங்களில் ஏற்றிராத வேடத்தில் இருப்பார் என்று நடிகர் வசந்த் ரவி கூறியுள்ளார்.

இப்படத்தில் வசந்த் ரவியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகும் 'ஜெய்லர்' இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யோகி பாபு, கன்னட நட்சத்திரம் சிவராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோஃப் என 'ஜெய்லர்' படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது.