ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திரக் கதை 'யாத்திசை'

3 mins read
f1bc2212-9535-4024-8ff8-17f3e95d3d69
-

சோழர்­க­ளைப் பெரு­மைப்­ப­டுத்­தும் 'பொன்­னி­யின் செல்­வன் 2' இம்­மா­தம் 28ஆம் தேதி வெளி­யா­வ­தற்­குள் பாண்­டி­யர்­களைப் பெரு­மைப்­ப­டுத்­தும் 'யாத்­திசை' படம் இம்­மா­தம் 21ஆம் தேதி வெளி­யாக இருக்­கிறது. 'யாத்­தி­சை' படத்­தின் முன்­னோட்­டக் காட்சி வெளி­யான பிறகு இந்­தப் படத்தை திரை­ய­ரங்­கி­னில் காண பலர் ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

இந்­திய சினி­மா­வில் தற்­பொ­ழுது

சரித்­தி­ரக் காலம் என­லாம். தொடர்ந்து சரித்­திரக் கதை­க­ளாக வரு­கின்­றன. 'பாகு­பலி', 'பொன்­னி­யன் செல்­வன்', 'சாகுந்­த­லம்' ஆகிய படங்­கள் ரசி­கர்­க­ளின் எதிர்­பார்ப்பை அதி­க­ரித்­துள்­ளன.

இந்த வரி­சை­யில் தமி­ழில் அடுத்து வெளி­யாக இருக்­கும் திரைப்­ப­டம்

'யாத்­திசை'.

கடந்த ஏழாம் நூற்­றாண்­டில் வாழ்ந்த ரண தீரன் தலைமையி­லான பாண்­டி­யர்­

க­ளுக்­கும் போரில் தோல்வி கண்ட சோழர்­க­ளின் கூட்­டா­ளி­க­ளான எயி­னர்­கள் என அழைக்­கப்­படும் பழங்­குடி கூட்­டத்­திற்­கும் இடையே நடந்த போராட்­டமே இந்த படத்­தின் கதை.

மாபெ­ரும் பாண்­டி­யர்­க­ளின் படையை இந்த பழங்­குடி கூட்­டம் வீழ்த்­தி­யதா? இல்­லையா என்­பதே பர­ப­ரப்­பான நகர்­வு­

க­ளு­டன் கூடிய கதைக்­க­ள­மாக உரு­வாகி இருக்­கிறது.

இந்­தப் படத்­தின் இயக்­கு­நர் தரணி ராசேந்­தி­ரன் கூறு­கை­யில், "'யாத்­திசை'யைக் கதை­யா­கச் சொல்­லும்­போது யாரும் நம்­ப­வில்லை. என் தயா­ரிப்­பா­ளர் நம்­பி­னார். முழு­மை­யா­கக் கதை­யைக்கூட கேட்­கா­மல், படத்­தைத் தயா­ரிக்­கச் சம்­ம­தித்­தார். அந்த நம்­பிக்­கை­யில் படம் உரு­வா­னது.

"முறை­யான திட்­ட­மி­டல்­தான் இந்­தக் கதை­யைக் காட்சி வடி­வ­மாக மாற்­றி­யுள்­ளது என்­பேன். படத்­தில் வேலை செய்த அனை­வ­ரும் புதி­ய­வர்­கள் என்­றா­லும் குழு­வாக உழைத்­தோம். அனை­வ­ரும் இது எங்­கள் வாழ்க்­கைக்­கான போராட்­டம் என்­பதை உணர்ந்து ஓடி­னோம். அந்த வெறியே படம் சிறப்­பாக வந்­த­தற்­குக் கார­ணம்.

"தேனி, கம்­பம், தஞ்­சா­வூர், உடை­யார்­பா­ளை­யம், செஞ்சி ஆகிய பகு­தி­களில் படப்­பி­டிப்பை நடத்­தி­னோம். குறிஞ்சி, மரு­தம், பாலை, முல்லை ஆகிய பகு­தி­களை மையப்­ப­டுத்­திப் படம் பிடித்­துள்­ளோம். வர­லாற்­றுக்கு எவ்­வ­ளவு நெருக்­க­மா­கக் கொண்டு செல்ல முடி­யும் என்­பதை யோசித்­துச் செய்­தி­ருக்­கி­றோம்.

"புனை­வாக இருந்­தா­லும் வாழ்­வி­யல் கூறு­களை ஆய்­வுக்கு உட்­ப­டுத்­திச் செய்­தி­ருக்­கி­றோம். உதா­ர­ணத்­துக்கு அந்­தக் கால­கட்­டத்­தில் ஆடை­கள் கிடை­யாது. ஆனால் நிர்­வா­ண­மா­கக் காட்­டி­னால் தணிக்­கைப் பிரச்­சினை வரும்.

"வர­லாற்­றுச் சான்­று­கள்­படி அப்­போது ஆடை­க­ளுக்­குப் பதி­லாக நகை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யதை அறிந்­தோம். ஆகை­யால் நகை­க­ளையே ஆடை­க­ளாக வடி­வ­மைத்­தோம். மற்ற படங்­கள்போல் வட மாநி­லங்­க­ளுக்­குச் செல்­லா­மல் இங்கே உள்ள கோயில்­களை உதா­ர­ண­மாக வைத்து கட்­ட­டங்­களை உரு­வாக்­கி­னோம்.

"உதா­ர­ணத்­துக்கு இங்கே தூண்­கள் வைத்தே கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்­டுள்­ளன. வட மாநி­லங்­களில் இப்­படி கிடையாது. இங்கே இருந்த அரண்­ம­னை­க­ளுக்­கும் அங்கே இருக்­கும் அரண்­ம­னை­க­ளுக்­கும் நிறைய வித்­தி­யா­சங்­கள் உள்­ளன. திரை­யில் பார்க்­கும்­போது எங்­க­ளின் அய­ராத உழைப்பை நிச்­ச­யம் உணர்­வீர்­கள்.

"படத்­தின் மொழிக்­குப் பெரி­தும் மெனக்­கெட்டு உள்­ளோம். 30 நிமிட பழங்­கு­டிக் காட்­சிக்கு, 7ஆம் நூற்­றாண்டு இலக்­கி­யங்­களை ஆய்வு செய்து அதைத் தொகுத்து உரை­யா­ட­லாக மாற்­றி­யுள்­ளோம்.

"அந்­தக் காட்­சி­க­ளுக்கு ஆங்­கி­லம், தமி­ழில் விளக்­கம் போடத் திட்­ட­மிட்­டுள்­ளோம். நம்­மி­டம் வழக்­கில் இருந்த அந்­தச் சொற்­களை மீட்­டு­ரு­வாக்­கம் செய்­யும் ஆவ­ண­மாக இதை எண்­ணு­கி­றோம்.

"புரிந்­து­கொள்ள சற்று சிர­ம­மாக இருந்­தா­லும் பல­மான காட்சி வடி­வ­மைப்பு இருப்­ப­தால் துணிந்து இந்த முடி­வினை எடுத்­துள்­ளோம்.

"இந்­தப் படம் நிச்­ச­ய­மாக மிகைப்­ப­டுத்­தல் என்­பது இருக்­காது. யதார்த்­தத்தை இதில் பதிவு செய்ய முற்­பட்டு இருக்­கி­றோம். நிறைய ஆய்­வா­ளர்­க­ளைச் சந்­தித்து, புத்­த­கங்­க­ளைப் படித்து, எது வர­லாற்­றோடு இயைந்து வரு­கி­றதோ அதைக் கடு­மை­யான உழைப்­பைக் கொட்டி பட­மாக்­கி­யுள்­ளோம்.

"ஒவ்­வொரு விஷ­யத்­தை­யும் உளப்­பூர்­வ­மாக ரசித்­துச் செய்­துள்­ளோம். மக்­கள் இம்­மா­தி­ரி­யான முயற்­சிக்கு ஆத­ரவு தரவேண்­டும் என்று

வேண்­டு­கி­றோம். நிச்­ச­ய­மாக இது புது அனு­ப­வத்­தைத் தரும்," என்றார்.

இந்தப் படம் வெளியான மறு வாரமே சோழர்­க­ளின் வாழ்வை புனை­க­தை­யா­கச் சொல்­லும் `பொன்­னி­யின் செல்­வன்-2' வெளி­வ­ரு­வ­தால், பாண்­டி­யர்­க­ளின் புனை­க­தை­யைச் சொல்­ல­வ­ரும் `யாத்­திசை' பெரும் எதிர்­பார்ப்பை

ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சோழர்களுக்கு முன் திரைக்கு வரும் பாண்டியர்கள்!