பிரியாணி விருந்து கொடுத்த சிலம்பரசன்

பிரியாணி விருந்து கொடுத்த சிலம்பரசன்

1 mins read
a14462e5-f5ad-4a95-b559-cfa9c1815122
-

`பத்து தல' படத்திற்குப் பின், புத்துணர்வுடன் காணப்படுகிறார் சிலம்பரசன். அதன் முன்னோட்டமாக நேற்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்ததுடன் அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தும் மகிழ்ந்திருக்கிறார்.

அதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அண்மையில் நடந்த 'பத்து தல' இசைவெளியீட்டு விழாவில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்த சிலம்பரசன் மகிவும் மகிழ்ந்து போனார். `எனக்காக இவ்வளவு பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய கஷ்டங்களை எல்லாம் நான் பார்த்துவிட்டேன். இனி எல்லாம் நல்லதாகத்தான் நடக்கும். இனி என் ரசிகர்களாகிய உங்களை விரைவில் சந்திப்பேன்' என்று கூறியிருந்தார்.

"அவர் சொன்னதுபோல ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவர் வீட்டிற்கே வரவழைத்து தன் கையாலேயே பிரியாணி வழங்கி மகிழ்ந்தார். பின்னர் அவர்களுடன் படம் எடுத்துக்கொண்டார். கர்நாடகாவில் இருந்தும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர். நிர்வாகிகளைச் சந்தித்தது போல் விரைவில் ரசிகர்களைச் சந்திக்க இருக்கிறார் சிலம்பரசன்," என்று கூறினார்.