நடிகர் கமல்ஹாசன் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இரண்டாம் பாகம் இம்மாத இறுதியில் வெளியீடு காண உள்ளது. அதன் பிறகு கமல்ஹாசனை வைத்து தாம் இயக்கும் படத்துக்கான பணிகளைத் தொடங்க உள்ளாராம் மணிரத்னம்.
இந்நிலையில், முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார் நயன்தாரா. இதற்கான கால்ஷீட், சம்பளம் குறித்து நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்.
பொதுவாக தனது படங்களில் நடிப்பவர்களிடம் மொத்தமாக கால்ஷீட் வாங்கிக்கொள்வது மணிரத்னத்தின் வழக்கம். ஆனால் நயன்தாரா கால்ஷீட் விவகாரத்தில் கறார் காட்டுபவர்.
எனினும் மணிரத்னம் படம் என்பதாலும் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதாலும் அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வார் எனக் கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும்.
முன்னதாக இப்படத்தில் திரிஷா நடிப்பார் எனத் தகவல் வெளியானது.
நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

