முதன்முறையாக விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்க உள்ளார் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர்.
'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய இரு கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய ராம்குமார் மூன்று படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இம்முறையும் அவர் விஷ்ணு விஷாலுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. முழுநீள காதல், நகைச்சுவை கலந்த கற்பனைப் படைப்பாக இந்தப் படம் உருவாகும் என்கிறது இயக்குநர் தரப்பு. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் இது.
இந்நிலையில், இப்படத்தில் அதிதி சங்கரை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். எதிர்வரும் மே மாத முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார் அதிதி.
ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால்.