'விருமாண்டி' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அபிராமி, தற்போது இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் நடித்துள்ள 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி' என்ற இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
திடீரென காணாமல் போகும் கல்லூரி மாணவி ஒருவர் ஏரியில் பிணமாகக் கிடக்கிறார். அவரைக் கொலை செய்தது யார், எதனால் அந்தக் கொலை நடந்தது, இது தொடர்பான மர்ம முடிச்சுகள் எவ்வாறு அவிழ்கின்றன என்பதுதான் கதையாம்.
"இது நான் நடித்துள்ள முதல் இணையத்தொடர். பொதுவாக எனக்குத் திகில் கதைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
"இத்தொடருக்காக திறமையான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லூரி, குடும்ப நிகழ்வுகளை உள்ளடக்கிய தொடராக இருக்கும். நான் இரு குழந்தைகளின் தாயாகவும் இளம் விதவையாகவும் நடித்து இருக்கிறேன்.
"இது அனைத்து தரப்பின ருக்கும் பிடித்தமான தொடராக இருக்கும்," என்கிறார் அபிராமி.
விஷால் வெங்கட் இயக்கும் இத்தொடருக்கு ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் என்.குமார் இசையமைத்துள்ளார்.

