ஓவியராக மாறிய ஷாம்லி

ஓவியராக மாறிய ஷாம்லி

1 mins read
60d0b037-46aa-4ce8-aeb6-ac5ac21dec80
-

திரைத்­து­றைக்கு இணை­யாக ஓவி­யக்­க­லை­யில் தமக்கு ஆர்­வம் உள்­ள­தா­கச் சொல்­கி­றார் நடிகை ஷாம்லி.

சினி­மா­வில் கிடைத்த வாய்ப்பு­களில் நடித்து வரும் இவர், அவ்­வப்­போது ஓவி­யக் கண்­காட்­சி­க­ளை­யும் நடத்தி வரு­கி­றார். அவற்­றுக்கு நல்ல வர­வேற்­பும் கிடைத்து வரு­கிறது.

"ஷாம்லி தனது ஓவி­யத்­தில் இடம்­பெ­றச் செய்­யும் சில கோடு­கள், வளை­வு­கள், வண்­ணங்­கள் தனித்­து­வ­மாக உள்­ளன. மேலும், அவ­ரது ஓவி­யங்­க­ளைப் பார்க்­கும்­போது பெண்­கள் தங்­க­ளுடைய ஆன்­மாவை சுதந்­தி­ர­மாக வெளிப்­ப­டுத்­தும் உணர்­வைப் பெற முடி­கிறது," என பலர் சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டுள்­ள­னர்.

"இது­வரை அறு­ப­துக்­கும் மேற்­பட்ட படங்­களில் நடித்­துள்­ளேன். ஓவி­யம் மீதான ஆர்­வம் கார­ண­மாக அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்று ஓவி­யக்­க­லை­யில் பயிற்சி மேற்­கொண்­டேன். துபா­யில் 300 கலை­ஞர்­க­ளுக்கு மேல் பங்­கேற்ற கண்­காட்­சி­யில் பங்­கேற்­றேன். மீண்­டும் சினி­மா­வில் நடிப்­பது குறித்து திட்­டம் ஏதும் இல்லை," என்­கி­றார் ஷாம்லி.