'நானே நாயகன், வில்லன்'

'நானே நாயகன், வில்லன்'

2 mins read
ff061d70-a582-4370-8964-d2459751b753
-

சரா­சரி ரசி­கர்­க­ளின் மன­தில் இடம்­பி­டிப்­பதே தமது இலக்கு என்­கி­றார் நடி­கர் (மாஸ்­டர்)) மகேந்­தி­ரன். இவர் நாய­க­னாக நடித்­துள்ள 'ரிப்­பப்­பரி' படம் விரை­வில் திரை­காண உள்­ளது.

இந்­நி­லை­யில், கதா­நா­ய­கன், வில்­லன் என எத்­த­கைய கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் அவற்றை ஏற்று நடிக்­கத் தயார் என்­கி­றார் மகேந்­தி­ரன்.

"சிறு வயது முதல் நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன். அத­னால் 'பக்­கத்து வீட்­டுப் பையன்' என்று சொல்­லும் அள­வுக்கு ரசிகர்கள் என்னை அடை­யா­ளம் கண்­டு­கொள்­கின்­ற­னர். மேலும் தங்­கள் குடும்­பத்­தில் ஒரு­வ­னா­க­வும் என்­னைக் கரு­து­கின்­ற­னர். எனக்­கான இந்த இடத்தை தக்கவைத்­துக் கொள்­வ­தில் கவ­ன­மாக இருக்­கி­றேன்," என்­கி­றார் மகேந்தி­ரன்.

நாய­கன், வில்­லன் என மாறு­பட்ட நடிப்பைக் கச்­சி­த­மாக வழங்­கு­வ­தால் திரை விமர்­ச­கர்­கள் மகேந்­தி­ரனை பாராட்­டு­கி­றார்­கள். நடிப்பு என்று வந்­து­விட்ட பிறகு எந்த வேட­மாக இருந்­தா­லும் தனது நடிப்பை நூறு விழுக்­காட்­டுக்­கும் அதிக­மாக வழங்க முயற்சி செய்­வ­தா­கச் சொல்கிறார்.

"நகர்ப்­புற ரசி­கர்­க­ளை­விட கிரா­மப்­புற மக்கள்­தான் எனது இலக்கு. முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­க­ளுக்­கு­த்தான் நகர்ப்­புறங்­களில் வர­வேற்பு கிடைக்­கும்.

"எனவே குடும்­பத்­து­டன் அமர்ந்து படம் பார்க்க விரும்­பும் கிராம மக்­க­ளுக்­குப் பிடித்­த­மான படைப்­பு­களில் இடம்­பெற விரும்­பு­கி­றேன்.

"ஏனெ­னில் அந்த ரசி­கர்­களில் பெரும்­பா­லா­னோர் வெள்­ளந்தி மனி­தர்­கள். திரையில் நாம் சிரித்­தால் அவர்­களும் சிரிப்­பார்­கள். திரை­யில் காணும் கதை­யு­டன் உணர்­வுபூர்­வ­மாக ஒன்­றி­வி­டு­வார்­கள்.

"இது­போன்ற படங்­க­ளின் மூலம்­தான் 'மகேந்­தி­ரன் நம்ம வீட்­டுப் பையன்' என்ற இடத்தைத் தக்க வைக்க முடி­யும். அது மட்­டு­மல்ல, வட்­டார கதை­களும் கதா­பாத்­தி­ரங்­களும் எனக்கு நன்­றா­கப் பொருந்­து­கின்­றன.

"'ரிப்­பப்­பரி' போன்ற படங்­க­ளின் மூலம் கிரா­மப்­புற ரசி­கர்­களை நிச்­ச­யம் மகிழ்­விக்க இய­லும் என நம்­பு­கி­றேன். அதற்குத் தேவை­யான அம்­சங்­கள் என்ன என்­ப­தில்­தான் எனது முழுக் கவ­னத்தை­யும் செலுத்­து­கி­றேன்," என்­கி­றார் மகேந்­தி­ரன்.

எப்­படி வில்­லனாக, நாய­க­னாக மாறி­மாறி நடிக்க முடிகிறது?

"இதற்கு முன்பு 'மாஸ்­டர்' படத்­தில் கௌரவ வேடத்­தில் நடித்­தி­ருந்­தேன். இப்­போது கேட்­டால், அதை­விட 'ரிப்­பப்­பரி' பட வாய்ப்பு பெரிது என்­பேன். ஏனெ­னில் 'ரிப்­பப்­பரி' போன்ற படங்­களில் நமது திற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்த அதிக நேர­மும் வாய்ப்­பும் கிடைக்­கும்.

"'மாஸ்­டர்' படத்­தில் நான் நடித்­தி­ருக்­கா­விட்டாலும் அது வெற்றி பெற்­றி­ருக்­கும். ஆனால் 'ரிப்­பப்­பரி' போன்ற படைப்பு அதில் நடித்­துள்ள, பங்­கேற்ற அனை­வ­ருக்­குமே ஒரு வாழ்­வா­தா­ர­மாக இருக்­கும்.

"பெரும் பொருள்­செ­ல­வில் தயா­ரா­கும் படங்­களில் ஆகச்­சி­றிய வேடத்­தில் நடித்­தாலும் மன­அ­ழுத்­த­மும் பொறுப்­பும் அதி­க­மாக இருக்­கும்.

"ஆனால் 'ரிப்­பப்­பரி' போன்ற படத்­தில் நடிக்­கும்­போது எந்­த­வித பதற்­ற­மும் இருக்­காது. மாறாக நமது கதா­பாத்­தி­ரத்­தை­யும் கதைக்­களத்தை­யும் நன்கு அனு­ப­வித்து உற்­சா­க­மாக நடிக்­க­லாம்," என்று சொல்­லும் மகேந்­தி­ரன்,

தற்­போது குறைந்த பொருள் செல­வில் உருவாகி வரும் தமிழ்ப் படங்­களில் நடித்து வருபவர், மிக விரை­வில் தமது கன­வுப்­ப­டம் குறித்த அறி­விப்பு வெளி­யா­கும் என்­கி­றார். அந்­தக் கன­வுப் படத்தை இயக்­கப் போவ­தும் மகேந்­தி­ரன்­தான்.