பாதி படப்பிடிப்புடன் நிற்கும் 1,000 தமிழ்ப் திரைப்படங்கள்

பாதி படப்பிடிப்புடன் நிற்கும் 1,000 தமிழ்ப் திரைப்படங்கள்

1 mins read
6389fe6f-3ea4-452d-a786-584abab02ba5
-

தமிழ்த் திரை­யு­ல­கில் பாதிப் படப்­பி­டிப்பு முடி­வ­டைந்த நிலை­யில், அடுத்­த ­கட்­டத்­துக்­குச் செல்ல முடி­யா­மல் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட படங்­கள் முடங்கி உள்­ள­தாக தயா­ரிப்­பா­ளர் பாலாஜி தெரி­வித்­துள்­ளார்.

இவர் 'ஜம்பு மகி­ரிஷி' என்ற படத்தை தயா­ரித்து, நாய­க­னாக நடித்­துள்­ள­து­டன் அப்­ப­டத்தை இயக்­க­வும் செய்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் பட விழா ஒன்­றில் பேசிய அவர், குறைந்த செல­வில் பட­மெ­டுக்­கும் தயாரிப்­பா­ளர்­களை அணு­கும் சில இயக்­கு­நர்­கள், தவறான வாக்­குறுதி­களை அளித்து ஏமாற்று­வ­தா­கச் சாடி­னார். இதன் கார­ண­மாக தயா­ரிப்­பா­ளர்­கள் தங்­கள் பணத்தை இழந்து நடுத்­தெ­ரு­வில் நிற்க வேண்­டிய அவ­லம் ஏற்­ப­டு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"ஆயி­ரம் படங்­கள் பாதிப் படப்­பி­டிப்­பு­டன் நிறுத்­தப்­பட்டு உள்­ளன. தணிக்­கைச் சான்றிதழ் பெற்­றும் வெளி­வ­ரா­மல் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட படங்­கள் முடங்கி உள்­ளன. படத்தை விற்­றுத் தரு­வ­தா­கச் சொல்­லும் சில விநி­யோ­கிப்­பா­ளர்­கள் லட்­சக்­கணக்­கில் கமி­ஷன் கேட்­கி­றார்கள். இந்த நிலை மாற வேண்டும்," என்­றார் பாலாஜி.