காதல் வலையில் நாயகிகள்

காதல் வலையில் நாயகிகள்

3 mins read
ded65be4-89cb-4e45-9609-ca349682abba
-

இளம் கதா­நா­ய­கி­கள் காதல் வலை­யில் விழு­வ­தும் காதல் விவ­கா­ரத்தை மறைப்­ப­தும் வாடிக்­கை­யான ஒன்­று­தான்.

காத­லிப்­பதை மறுக்­கும் அவர்­களில் பலர் திடீ­ரென திரு­ம­ணம் செய்துகொண்­ட­தாக அறி­விப்பு வெளி­யி­டு­வ­தும் தொடர்ந்து நிகழ்ந்து வரு­கிறது.

அந்த வகை­யில், இளம் நாய­கி­கள் சில­ரது காதல் விவகா­ரம் குறித்து ஊட­கங்­கள் தொடர்ந்து செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. சமூக ஊட­கங்­க­ளி­லும் இது­குறித்­துப் பர­வ­லா­கப் பேசப்­ப­டு­கிறது.

நடிகை தமன்­னா­வும் இந்தி நடி­கர் விஜய் வர்­மா­வும் காத­லிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கடந்த சில மாதங்­க­ளாக இரு­வ­ரும் பல இடங்­களில் ஒன்­றா­கக் காணப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தமன்னா தாம் யாரை­யும் காத­லிக்­க­வில்லை என்று கூறி வந்த நிலை­யில், ஒரு விருந்து நிகழ்­வில் விஜய் வர்மாவைக் கட்­டிப்­பி­டித்து நட­ன­மா­டி­னார். ஆட்­டத்­தின் முடி­வில் அவ­ருக்கு சூடான முத்­த­மும் கொடுத்­தார்.

ஊட­கங்­களில் இது தொடர்­பான புகைப்­படங்­கள் வெளி­யான பிறகு, காத­லிப்­பதை ஒப்­புக்­கொள்­ளா­விட்­டா­லும் மறுப்பு தெரி­ விக்கவில்லை தமன்னா.

ஊர­றிந்த ரக­சி­யம் என்­ப­து­போல் ஆகி­விட்­டது நடிகை ராஷ்­மி­கா­வின் காதல் விவ­கா­ரம். அவ­ரும் தெலுங்கு நடி­கர் விஜய்­தே­வ­ர­கொண்­டா­வும் காத­லிப்­ப­தாக தொடர்ந்து பேசப்­பட்டு வரு­கிறது.

இரு­வ­ரும் வெளி­நா­டு­க­ளுக்கு ஜோடி­யா­கச் சென்று ஊர் சுற்­று­கி­றார்­கள் என்­றும் சில நிகழ்ச்­சி­களில் ஒன்றா­கப் பங்­கேற்­கி­றார்­கள் என்­றும் கிசு­கி­சுக்­கள் வலம் வரு­கின்­றன.

ஆனால் எந்­தக் கேள்­வி­யாக இருந்­தா­லும், "தொழில் நிமித்­தம் சென்­றோம். பட விளம்­ப­ரத்­துக்­காக சில­வற்­றைச் செய்ய வேண்­டி­யுள்­ளது," என்­ப­து­தான் இரு­த­ரப்­பி­லும் அளிக்­கப்­படும் விளக்­கம்.

இதற்­கி­டை­யில் கிரிக்­கெட் வீர­ரு­டன் இணைத்து பேசப்­பட்­டார் ராஷ்­மிகா. எனவே விஜய் தேவ­ர­கொண்­டாவை அவர் கழற்­றி­விட்­டு­விட்­டார் என்­றும் கூறப்­பட்­டது. இதற்கு மட்­டும், "அப்­ப­டி­யெல்­லாம் ஏதும் இல்லை. எந்த கிரிக்­கெட் வீர­ரு­ட­னும் நான் காதல் வயப்­ப­ட­வில்லை," என ராஷ்­மிகா விளக்­கம் அளித்­துள்­ளார்.

சல்­மான்­கா­னு­டன் தொடர்ந்து இரு படங்­களில் நடிக்­கப்­போக, பூஜா ஹெக்­டே­வுக்­கும் அவ­ருக்­கும் காதல் மலர்ந்­துள்­ள­தாக தக­வல் வெளி­யா­னது. இது­கு­றித்து பூஜாவிடம் செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­போது, "அப்­படி நடந்­தால் நன்­றாக இருக்­கும் அல்­லவா?" என்று எதிர்­கேள்வி எழுப்­பி­னார்.

பிறகு ஓரிரு முறை காதல் விவ­கா­ரம் குறித்து பேச விரும்­ப­வில்லை என்று கூறி­னா­லும், பாலி­வுட்­டின் முன்­னணி நாய­க­னான சல்­மானை தாம் காத­லிக்­க­வில்லை என்று மட்­டும் அவர் வெளிப்­ப­டை­யாக அறி­விக்­க­வில்லை என்று ரசி­கர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

தமி­ழில் வெளி­யான 'வீரம்' படத்­தின் இந்தி மறு­ப­திப்­பில் சல்­மான்­கா­னு­டன் இணைந்து நடித்­துள்­ளார் பூஜா ஹெக்டே.

மற்ற நடி­கை­கள் காதலை திரை­போட்டு மறைக்­கி­றார்­கள் என்­றால் கமல்­ஹா­சன் மக­ளான ஷ்ருதி இவ்­வி­ஷ­யத்­தில் வெளிப்­ப­டை­யாக உள்­ளார்.

லண்­ட­னைச் சேர்ந்த நாடக நடி­கர் மைக்­கல் கார்­சே­லுவை இவர் காத­லிப்­ப­தாக கிசு­கி­சுக்­கள் வெளி­வந்­தன. இரு­வ­ரும் இணைந்து சுற்­றும் புகைப்­ப­டங்­களும் சமூக ஊட­கங்­களில் பர­வின.

தனது குடும்ப நிகழ்ச்­சி­களில் மைக்கலைப் பங்­கேற்க வைத்த ஷ்ருதி, விரை­வில் திரு­மண அறி­விப்பை வெளி­யி­டு­வார் என்று ரசி­கர்­கள் எதிர்­பார்த்­த­போது திடீர் திருப்­பம். இரு­வ­ரும் கருத்து வேறு­பாடு கார­ண­மாக பிரிந்­து­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், டெல்­லி­யைச் சேர்ந்த சாந்­தனு கசா­ரியா என்­ப­வ­ரு­டன் ஷ்ருதி மீண்­டும் காதல்­வ­யப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல். சாந்­த­னு­வு­டன் ஒன்­றாக இருக்­கும் புகைப்­ப­டங்­க­ளை­யும் சமூக ஊட­கங்­களில் பகிர்ந்து வரு­கி­றார் ஷ்ருதி.

'பாகு­பலி' பிர­பா­ஸும் நடிகை கீர்த்தி சனோ­னும் காத­லிப்­ப­தாக ஒரு தக­வல் வெ­ளி­யாகி உள்­ளது. மறு­பக்­கம் அவருடன் பல­கா­ல­மாக இணைத்­துப் பேசப்­பட்ட நடிகை அனுஷ்கா பிர­பல தொழி­ல­தி­பர் ஒரு­வரை திரு­ம­ணம் செய்­து­கொள்ள இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதே­போல் கீர்த்தி சுரேஷ், தொழில் அதி­பர் ஒரு­வரை மணக்க இருப்­ப­தா­க­வும் தக­வல் பர­வி­யுள்­ளது.

"கதா­நா­ய­கி­க­ளின் காதல் விவ­கா­ரம் என்ற தலைப்­பில் நிறைய செய்­தி­களும் கிசு­கி­சுக்­களும் ஒவ்­வொரு நாளும் வெளி­வந்து கொண்­டு­தான் இருக்­கும். ஆனால் திரு­ம­ணம் நடந்­தால் மட்­டுமே கிசு­கி­சுக்­கள் உண்­மை­யா­கும். இல்­லை­யெ­னில் நட்­பா­கப் பேசிப் பழ­கி­னோம் என்று ஒரே வரி­யில் விளக்­கம் அளித்­து­விட்டு அடுத்த வேலை­யைப் பார்க்கப் போய்விடுவர்," என்­கி­றார்­கள் விவ­ரம் அறிந்த திரை­யு­ல­கச் செய்­தி­யா­ளர்­கள்.