திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

3 mins read

 சில காலமாக திரை யுலகை விட்டு ஒதுங்கி நின்ற குணச்சித்திர நடிகர் சார்லி இப்போது 11 படங் களில் நடித்து வருகிறார்.

திரைத்துறையில் நகைச் சுவை என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளா ராம். இதுவரை 800 படங் களில் நடித்து முடித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'கொன்றால் பாவம்' படத்துக்கு விமர்சன ரீதியில் பாராட்டுகள் கிடைத்தன. குறிப்பாக அனைத்து விமர்சகர்களுமே சார்லியின் நடிப்பு சிறப்பாக இருந்தது என கூறத் தவறவில்லை.

"மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்டேன். சிறிய கதா பாத்திரங்கள் வேண்டாம் என்று சில காலம் ஒதுங்கி இருந்தேன். இப்போது எனக்கு முக்கியத்து வம் அளிக்கும் கதாபாத்திரங் கள் அமைவதால் 11 படங்களில் நடிக்க சம்மதித்துள்ளேன்," என்கிறார் சார்லி.

 தமிழ்த் திரையுலகம் எப்போதுமே சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருவதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறை பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது

என்றும் அனைத்துலக திரைப் பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு, அதிக

மான விருதுகளையும் பாராட்டுகளையும் வென்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். "ஆஸ்கார் உள்ளிட்ட மற்ற பல்வேறு விருது விழாக்களில் தமிழ்த் திரைப்படங்களும் பிற தென்னிந்திய மொழிகளில் உருவான திரைப்படங்களும் பெற்றுள்ள விருதுகள், எங்கள் திறமைக்கான, உலக அரங்கில் நாங்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதற்கான சான்றுகள்," என்றார் கார்த்தி.

 ஆஸ்கார் விருது வாங்குவது முக்கியமல்ல என்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். 'கேஜிஎஃப்', 'ஆர்ஆர்ஆர்', 'காந்தாரா' போன்ற படங்கள் பெரிய வெற்றி பெறுவதற்கு காரணம் அவை அனைத்துமே சமூகம் சார்ந்த படைப்புகள் என்றும் மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஆஸ்கார் விருது பெறுவதை விட, நம் மக்களுக்கான படைப்புகளை, நாம் கொண்டாடுகிற படங்களை ஆஸ்கார் வரை கொண்டு சென்று அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதைத்தான் நான் ஒரு புரட்சியாக பார்க்கிறேன்," என்கிறார் வெற்றிமாறன்.

 'இராவண கோட்டம்' படத்தில் கிராமத்து இளைஞனாக தாம் வாழ்ந்து காட்டியுள்ளதாகச் சொல்கிறார் நடிகர் சாந்தனு.

நகரப் பகுதியில் வளர்ந்த காரணத்தால் கடும் பயிற்சி எடுத்து கிராமத்து இளைஞனாக தன்னை உருமாற்றிக்கொண்டதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்தப் படத்தின் கதைக்களம் ராமநாதபுரம். அங்குள்ள மக்களின் வாழ்வியல் எனக்குப் புதிதாக இருந்தது. படப்பிடிப்பு இல்லாதபோதும் லுங்கி கட்டி சாதாரண இளைஞனாகவே நடமாடினேன். அங்குள்ள மொழியில் பேசினேன். காலணி அணியாமலேயே நடந்து திரிந்தேன்.

"இப்போது உங்களைப் பார்த்தால் சாந்தனு மாதிரியே இல்லை என்று பலரும் கூறினர். அந்த அளவுக்கு என்னை இயக்குநர் உருமாற்றி இருக்கிறார். முந்தைய படங்கள் போல் இல்லாமல் எளிய மக்களைச் சென்றடையும் கதாபாத்திரத்தில் நடித்துள் ளேன். ரசிகர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்," என்கிறார் சாந்தனு.

 இந்த ஆண்டு தமக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமையும் என நம்புவதாகச் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'தசரா' திரைப் படம் வசூலில் அசத்தி வருகிறது.

"அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் இணைந்து நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படமும் வெளியீடு காண உள்ளது. 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக

வும் நடிக்கிறேன். அடுத்து 'ரகு தாத்தா' என்ற தெலுங்கு படத்தில் நடிக்கி றேன்," என்கிறார் கீர்த்தி.