தாம் திரையுலகில் வென்று காட்டவும் சாதிக்கவும் நிறைய அம்சங்கள் உள்ளதாகச் சொல்கிறார் தனுஷ்.
தமக்கு லட்சியக் கனவு ஒன்று உள்ளது என்றும் அதுதான் வாழ்க்கையில் தம்மை இவ்வளவு தூரம் அழைத்து வந்துள்ளது என்றும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் கனவு காண்பதை நிறுத்தவில்லை. இன்னும் கனவு காண்கிறேன். எனக்கு முப்பது வயது ஆகும்போது 50 வயதில் உள்ளவர்கள் என்னைப் பார்த்து இளமையாக இருப்பதாக கூறினார்கள். இப்போது எனக்கு 40 வயது ஆகிறது. 60 வயது உள்ளவர்கள் இன்னும் நீங்கள் இளமையாக உள்ளீர்கள் என்று கூறுகிறார்கள்," என்று நகைச்சுவையுடன் பேசினார் தனுஷ்.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

