'குலசாமி' படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்க தாம் பணம் கேட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் அப்படத்தின் நாயகன் விமல். பணம் கிடைக்காததால் அந்நிகழ்வை தாம் புறக்கணித்ததாகக் கூறப்படுவது உண்மையல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அன்றைய தினம் நான் நடித்த மற்றொரு படமான 'தெய்வ மச்சான்' பட நிகழ்ச்சி இருந்தது. அதற்கான தேதியை அப்படக்குழுவினர் ஒரு மாதத்துக்கு முன்பே என்னிடம் சொல்லிவிட்டனர். ஆனால் 'குலசாமி' பட நிகழ்ச்சி குறித்து நான்கு நாள்களுக்கு முன்புதான் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு நிகழ்ச்சிகளுமே ஒரே தேதியில் நடைபெற்றதால் சிக்கல் ஏற்பட்டது.
"எனவே 'குலசாமி' படத்தின் இயக்குநரைத் தொடர்புகொண்டு எனது இயலாமையைத் தெரிவித்தேன். ஆனால் சிலர் வேண்டுமென்றே நான் பணம் கேட்டதாக தவறான தகவலைப் பரப்பியுள்ளனர்," என்கிறார் விமல்.