அலறி ஓடவைக்கும் குறட்டை; விரிவாக ஆராயும் 'குட் நைட்' திரைப்படம்

அலறி ஓடவைக்கும் குறட்டை; விரிவாக ஆராயும் 'குட் நைட்' திரைப்படம்

2 mins read
c8cd9bf8-f817-48c6-a421-b643a46d5021
-

குறட்­டையை மையப்­ப­டுத்தி ஒரு திரைப்­ப­டம் உரு­வா­கிறது. 'ஜெய்­பீம்' மணி­கண்­டன் நாய­க­னாக நடித்­துள்ள அப்­ப­டத்­துக்கு 'குட்­நைட்' எனத் தலைப்பு வைத்து உள்ளனர்.

இதன் முதல் தோற்­றச்­சுவரொட்­டிக்கு பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது. தூங்­கும்­போது கதா­நா­ய­கன் விடும் குறட்டை சத்­தத்­தால் அரு­கில் உள்­ள­வர்­கள் அலறி ஓடும் காட்சி அச்­சு­வ­ரொட்­டி­யில் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது. விநா­யக் சந்­தி­ர­சே­க­ரன் இயக்­கு­கி­றார்.

"குறட்டைப் பிரச்­சினை மட்­டு­மல்­லா­மல், நம் குடும்ப உற­வு­களுக்கு மத்­தி­யில் இருக்­கும் உணர்­வுபூர்­வ­மான அம்­சங்­கள், குடும்­பத்­துக்­குள் ஏற்­ப­டக்­கூ­டிய சிக்­கல்­க­ளைப் பற்றி பேசும் பட­மாக இருக்­கும்.

"இந்­தக் கதையை எழு­தும்­போதும் சரி, பட­மாக்­கும்­போ­தும் சரி, ஒவ்­வொரு காட்­சி­யும் மிக யதார்த்­த­மாக இருக்க வேண்டும் என்­ப­தில் மிகுந்த கவ­னம் செலுத்தி­னேன். அன்­றாட வாழ்க்கை நடை­மு­றை­யில் எதை­யெல்­லாம் கடந்து வந்­தி­ருக்­கி­றோமோ, அவற்றை எல்­லாம் இந்தப் படத்­துடன் அணுகு­மு­றை­யாக மாற்றி உள்­ளேன்.

"அப்பா, அம்மா, அக்கா, மாமா என குடும்ப உற­வு­க­ளு­டன் பொருத்­திப் பார்க்­கக்­கூ­டிய தரு­ணங்­க­ளைக் கொண்ட படம் இது," என்று சொல்­லும் விநா­யக்­கி­டம், குறட்டைப் பிரச்­சி­னையை தேர்வு செய்து படம் இயக்க என்ன கார­ணம் என்று கேட்­டால், தன் அண்­ண­னைச் சுட்­டிக்­காட்டு­கி­றார். இயக்­கு­ந­ரின் வீட்­டில் அவ­ரது அண்­ணன்­தான் பெரும் சத்­தத்­து­டன் குறட்டை விடு­வா­ராம். அத­னால் குறட்­டை­யைப் பற்றி தெரிந்­து­கொள்­ளும் ஆர்­வம் இயல்­பா­கவே தமக்கு வந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"தூக்­கம் தொடர்­பான பிரச்­சி­னை­களில் ஆலோ­சனை வழங்­கக்­கூ­டிய 'ஸ்லீப் டாக்­டர்'கள் சிலரை நேரில் சந்­தித்­துப் பேசி­னேன். பல கேள்­வி­களை எழுப்பி, விளக்­கங்­கள் பெற்­றேன். குறட்டை தொடர்­பாக பிர­சா­ரம் செய்­யா­மல், திரட்­டிய தக­வல்­க­ளைக் கொண்டு சுவா­ர­சி­ய­மான திரைக்­க­தையை அமைக்க முடிந்­தது," என்­கி­றார் விநா­யக்.

மணி­கண்­டன் 'காத­லும் கடந்து போகும்' படத்­தில் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் அரு­மை­யாக நடித்­தி­ருப்­ப­தா­கப் பாராட்­டு­ப­வர், மணி­கண்­டன்­போல் மிக யதார்த்­த­மான நடிப்பை வழங்­கக்­கூ­டி­ய­வர்­கள் திரை­யு­ல­கில் மிகக் குறைவு என்­கி­றார்.

"திரை­யில் தோன்­றும்­போது மணி­கண்­டன் தனக்­கான கதா­பாத்­தி­ர­மா­கவே மாறி­வி­டு­கி­றார். இந்த உரு­மாற்­றத்­துக்­காக அவர் எடுத்­துக்­கொள்­ளும் நேரம் மிகக் குறைவு.

"பொது­வாக ஒரு கதையை எழு­தும்­போது, அதில் இடம்­பெற்­றுள்ள கதா­பாத்­தி­ரங்­களில் இன்­னார் நடித்­தால் நன்­றாக இருக்­கும் என நினைப்­போம். அந்த வகை­யில் 'குட் நைட்' கதை எழு­தும்­போது மணி­கண்­டன், ரமேஷ் திலக் ஆகிய இரு­வ­ரும் என் மன­துக்­குள் வந்­து­விட்­ட­னர். அவர்­கள் இல்­லா­மல் படத்தை எடுப்­ப­தில்லை என்­ப­தில் தெளி­வாக இருந்­தேன்.

"மணி­கண்­ட­னைப் பொறுத்­த­வரை மனி­தா­பி­மா­னம், நடிப்பு என எல்­லாப் பக்­கங்­களில் இருந்­தும் எளி­தாக அன்­பைப் பெறக்­கூ­டி­ய­வர். குறட்டை விடு­ப­வ­ரைப் பற்றி பேசும்­போது நகைச்­சு­வை­யாக இருக்க வேண்­டும், அதே­ச­ம­யம் வரம்பு மீற­லும் இருக்­கக்­கூ­டாது. மணி­கண்­டன் இதை உள்­வாங்­கிக்­கொண்டு அரு­மை­யாக நடித்­தார்," என் கிறார் இயக்­கு­நர் விநா­யக்.