ராஷ்மிகாவின் ஆசை இதுதான்!

ராஷ்மிகாவின் ஆசை இதுதான்!

1 mins read
4e0d367e-9759-485a-8bfc-a5ce2b0283a4
-

தம் பெற்­றோ­ரைப் பெருமைப்­படுத்த தாம் இன்னும் பல­வற்றைச் சாதிக்க வேண்­டி­யுள்­ளது என்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.

பெற்­றோ­ருக்கு திரை­யு­ல­கம் குறித்து அதி­கம் தெரி­யாது என்­றும் தாம் பெற்றுள்ள பல்­வேறு விரு­து­க­ளின் முக்­கி­யத்­து­வம் குறித்து தெரிய­வில்லை என்­றும் அவர் ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஒரு நடி­கை­யின் பணி­யைப் பற்றி என் பெற்­றோ­ருக்கு முழு­மை­யான புரி­தல் இல்லை. திரை­யு­ல­கம் குறித்து அவர்­கள் இரு­வ­ருக்­கும் ஒன்­றுமே தெரி­யாது.

"எனினும் எனக்குத் தேவை­யா­னதை எல்­லாம் செய்து கொடுக்­கி­றார்­கள். எனக்கு எந்தப் பிரச்­சி­னை­யும் இல்­லா­மல் பார்த்­துக்­கொள்­கி­றார்­கள். என்­னு­டைய மகிழ்ச்­சி­தான் அவர்­க­ளுக்கு மற்ற எதை­யும்­விட முக்­கி­ய­மா­னது.

"தொடக்­கத்­தில் எனது செயல்­பாட்­டால் அவர்­க­ளுக்கு பல்­வேறு வகை­யி­லும் பொருளி­யல் சிக்­கல்­கள் ஏற்­பட்­டன. எனக்­காக அவர்­கள் பட்ட பாடு­கள் எல்­லாம் நன்கு தெரி­யும். அதனால்­தான் அவர்­கள் என்­னைப் பற்றி உண்­மை­யா­கவே பெரு­மைப்­ப­டும்­படி பல­வற்­றைச் செய்ய விரும்­பு­கி­றேன்.

"இதைவிட எனக்கு வேறு பெரிய இலக்கு இருக்க முடியாது. இன்­னும் நிறைய சாதிக்க வேண்டி உள்­ளது. நிச்சயமாக ஒருநாள் என்னைப் பற்றி பெற்றோர் பெருமிதம் கொள்வர்," என்­கி­றார் ராஷ்­மிகா.