குத்துப் பாடலுக்கு நடனமாட நடிகை ஸ்ரேயா ஒரு கோடி ரூபாய் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார் சமந்தா. அதன் பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களில் கதாநாயகிகள்கூட ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
"இதுபோன்ற பாடல்களைப் படமாக்க இரண்டு அல்லது மூன்று நாள்கள் போதுமானவை. அதற்கு மேல் கால்ஷீட் ஒதுக்கத் தேவை இல்லை என்பதாலும் அதிக ஊதியம் கிடைப்பதாலும் முன்னணி நாயகிகள்கூட நடனமாட முன் வருகிறார்கள்.
இவ்வாறு நடனமாட ஸ்ரேயா கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களை மலைக்க வைத்திருக்கிறது.
எனினும் இரண்டு புதுப்படங்களில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டுள்ளாராம் ஸ்ரேயா.

