ராதிகா: சமூக மாற்றம் வேண்டும்

1 mins read
72e32d2e-c2f8-4fbf-8f31-f6167e1b9296
-

ஆண்­க­ளுக்கு நிக­ராக சம்­பா­தித்­தா­லும்­கூட வீட்டு வேலை­கள் என்று வரும்­போது பெண்­கள்­தான் செய்ய வேண்­டும் என்ற மனப்­போக்கு நம் சமூ­கத்­தில் நில­வு­கிறது என்­கி­றார் ராதிகா ஆப்தே.

சிறு வயது முதல் இது­போன்ற சூழலை தனது வீட்­டி­லேயே பார்த்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"என் பெற்­றோர் சொந்த மருத்து­வ­ம­னையை நிர்­வ­கித்து வரு­கின்­ற­னர். என் தந்­தைக்கு நிக­ராக தாயா­ரும் மருத்­து­வ­ம­னை­யில் பணி­க­ளைக் கவ­னிக்­கி­றார். எனி­னும் மாலை வீடு திரும்­பிய அடுத்த நொடியே என் தாயார் குடும்­பத் தலை­வி­யாக மாறி­விடுகி­றார்.

"சமை­ய­லில் தொடங்கி அனைத்து வீட்டு வேலை­க­ளை­யும் அம்­மா­தான் செய்­வார். ஆணும் பெண்­ணும் சமம் என்­பதை ஏற்க அவ­ரது மனம் முன்­வ­ர­வில்லை.

"நல்ல குடும்­பத் தலைவி என்று பெயர் வாங்­கு­வ­தற்­காக பெண்­கள் தியா­கங்­கள் செய்ய வேண்­டிய அவ­சி­யம் இல்லை. பெண்களுக்கும் சில கனவுகள், லட்சியங்கள் இருக்கும்.

"இதைக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் புரிந்துகொண்டு செயல்பட்டால் சிக்கல் இருக்காது.

"அந்த வகையில் நாம் வாழும் சமூகத்தில் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது," என்­கி­றார் ராதிகா ஆப்தே.