சரத் பாபு கவலைக்கிடம்

சரத் பாபு கவலைக்கிடம்

1 mins read
e1c71baf-e23e-4643-badb-4cce22a72b4b
'முள்ளும் மலரும்' படத்தில் பெரிதும் பிரபலமடைந்த பாடல் காட்சியில் சரத் பாபு. படம்: இணையம் -

கோலிவுட்: பிரபல தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகரான சரத் பாபு கவலைக்கிடமாக இருக்கிறார்.

உடலின் பல்வேறு உருப்புகள் செயலிழந்து போய்விட்ட இவர் தற்போது செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமையன்று (23 ஏப்ரல்) உடல்நிலை மோசமடைந்த பிறகு 71 வயது சரத் பாபு அவசரமாக ஐதராபாத் நகரில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

80களிலும் 90களிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த, உலக நாயகன் கமல்ஹாசன் இருவருடனும் பல படங்களில் நடித்தவர் சரத் பாபு.

1980ஆம் ஆண்டு வெளியான 'நதியைத் தேடிவந்த கடல்' படத்தில் இவர் ஒருகாலத்தில் பிரபல நடிகையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் நடித்திருந்தார்.