'மொழியின்றி வெற்றியில்லை'

'மொழியின்றி வெற்றியில்லை'

3 mins read
2cea0791-cf39-4f75-b11e-8f45ec576226
-

இனி ஒரு படத்­தின் வெற்றி தோல்வி தொடர்­பான அம்­சங்­களை ஆய்வு செய்த பிறகே புதிய படத்­தில் நடிப்­பது குறித்து முடி­வெடுக்­கப் போவ­தா­கச் சொல்­கி­றார் நடிகை சம்­யுக்தா.

தனு­ஷு­டன் இவர் இணைந்து நடித்த 'வாத்தி' படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி­க­ளி­லும் பெரும் வசூ­லைப் பெற்­றுள்­ளது. இத­னால் இரு மொழி­க­ளி­லும் புதுப்­பட வாய்ப்­பு­கள் குவி­கின்­ற­ன­வாம்.

எனி­னும் அவற்றை ஏற்­றுக்­கொள்­வ­தில் சம்­யுக்தா அவ­ச­ரப்­ப­ட­வில்லை. 'வாத்தி' படத்­தை­ய­டுத்து தமி­ழில் இரண்டு பெரிய நிறு­வ­னங்­கள் கால்­ஷீட் கேட்டு இவரை அணு­கி­யுள்­ளன.

அந்­நி­று­வ­னங்­கள் தேர்வு செய்­துள்ள இரண்டு கதை­க­ளைக் கேட்­டுள்­ளா­ராம். ஆனால் ஒப்­பந்­தத்­தில் இன்­னும் கையெ­ழுத்­தி­ட­வில்லை.

கார­ணம், தெலுங்­கில் தற்­போது நடித்து முடித்­துள்ள 'விரு­பக்‌ஷா' படத்­துக்கு எத்­த­கைய வர­வேற்பு கிடைக்கிறது என்­பதை அறிய ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றார்.

"மிக வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளத்­து­டன் உரு­வா­கிறது 'விரு­பக்‌ஷா'. கடந்த 1990களில் ஆந்­திர மாநி­லத்­தில் உள்ள 'ருத்­ரா­வ­னம்' என்ற குக்­கி­ரா­மத்­தில் நடக்­கும் கதை.

"மலைக்­கி­ரா­ம­மான அங்கு 150 குடும்­பங்­கள் மட்­டுமே வசிக்­கின்­றன. அவர்­க­ளுக்­கென தனிப் பழக்க வழக்­கங்­கள், நம்­பிக்­கை­கள் உள்­ளன.

"அக்­கி­ரா­மத்­தைச் சேர்ந்த நந்­தினி என்ற இளம்­பெண் எந்­தக் கவலை­யும் இன்றி உற்­சா­க­மாக வலம் வரு­கி­றாள். அவ­ளுக்கு ஏற்­படும் அனு­ப­வங்­கள் படம் முழு­வ­தும் விவ­ரிக்­கப்­படும்.

"இது­போன்ற கதா­பாத்­தி­ரத்­துக்­கா­கத்­தான் இந்­நாள் வரை காத்­தி­ருந்­தேன் என்று சொல்­ல­லாம். அந்த அள­வுக்கு மிக­வும் சுவா­ர­சி­ய­மான கதா­பாத்­தி­ரம்.

"மலைக்­கி­ராம இளம்­பெண்­ணாக என்னை திரை­யில் அழ­கா­கக் காட்டி உள்­ள­னர். இதற்­காக மொத்த படக்­குழு­வும் உழைத்­தது என­லாம். அத­னால் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நன்­றிக்­க­டன்­பட்­டுள்­ளேன்," என்­கி­றார் சம்­யுக்தா.

இந்­தப் படத்­தில் நடித்து முடிப்­ப­தற்­குள் தெலுங்கு மொழி­யில் சர­ள­மா­கப் பேச வேண்­டும் என்று தமக்­குத்­தாமே இலக்கு நிர்­ண­யித்­துக்கொண்­டா­ராம். அது மட்­டு­மல்ல, தெலுங்கு ஆசி­ரி­யர் ஒரு­வ­ரை­யும் பணி­ய­மர்த்தி பயிற்சி பெற்­றுள்­ளார்.

"விரு­பக்­‌ஷா­வின் கதை­யைக் கேட்ட அடுத்த நிமி­டமே அதில் நடிப்­பது என முடிவு செய்­து­விட்­டேன். பிறகு வச­னப் பகு­தி­க­ளைப் படித்­துப் பார்த்­த­போது, மொழி தெரி­யா­மல் நந்­தினி கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­பது பெரும் தவறு எனத் தோன்­றி­யது.

"ஏனெ­னில் உயி­ரோட்­ட­முள்ள அத்­த­கைய வேடங்­களை ஏற்று, மொழி தெரி­யா­மல் வச­னங்­க­ளைப் பேசு­வது நியா­ய­மற்­றது. மொழி தெரி­யா­மல் வெற்றி பெற முடி­யாது என்­றும் கரு­தி­னேன். கொரோனா நெருக்­கடி காலத்­தில் கிடைத்த ஓய்வை வீண­டிக்க விரும்­ப­வில்லை. தெலுங்கு பயிற்­சி­யா­ளரை நிய­மித்து இயன்ற வேகத்­தில் அம்­மொ­ழி­யைக் கற்­றுக்­கொண்­டேன்," என்­கி­றார் சம்­யுக்தா.

'விரு­பக்‌ஷா' படத்­துக்­காக இவர் பழைய ஆடை­களை உடுத்தி நடித்­த­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. நடிப்­புக்­காக இளம் நாயகி ஒரு­வர் இந்த அள­வுக்கு தன்னை அர்ப்­ப­ணித்­தது பாராட்­டுக்­கு­ரிய என ஒரு தரப்­பி­னர் சம்­யுக்­தாவை பாராட்டி வரு­கின்­ற­னர்.

ஆனால், இந்­தத் தக­வல் உண்மை அன்று என்­கிறது நாயகி தரப்பு.

"மலைக்­கி­ராம இளம்­பெண் என்­ப­தால் புது உடை­களை வாங்க வசதி இருக்­காது. எனவே பழைய உடை­களை அணிய வேண்டி இருந்­தது. இதற்­காக படக்­கு­ழு­வி­னர் புது உடை­களை வாங்கி, அதை ஒரு­மு­றை­கூட பயன்­ப­டுத்­தா­ம­லேயே, பல­முறை துவைத்­த­னர். இத­னால் புத்­தா­டைக்­கு­ரி­யது பொலிவு இருக்­காது. அந்த உடை­க­ளைத்­தான் பயன்­ப­டுத்­தி­னேன்," என்று விளக்­கம் அளித்­துள்­ளார் சம்­யுக்தா.

'வாத்தி' படத்­தின் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளின் பார்வை தன் பக்­கம் திரும்­பி­ய­தில் மகிழ்ச்சி என்று குறிப்­பி­டு­ப­வர், தமி­ழில் அனைத்து முன்­னணி நாய­கர்­க­ளு­ட­னும் நடிக்க விருப்­பம் கொண்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

விஜய், அஜித், சூர்யா என சம்­யுக்­தா­வின் விருப்ப நாய­கர்­க­ளின் பட்­டி­யல் நீள­மாக உள்­ளது. பல்­வேறு மொழி­களில் நடிக்க வேண்­டும் என்­றும் விரும்­பு­கி­றா­ராம்.

சம்யுக்தா

ப, : தமி­ழ­கத்  