தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் படம்

1 mins read
7c4878e0-2e3d-4469-870e-195be4103163
-

கிரிக்­கெட் விளை­யாட்டை மையப்­ப­டுத்தி மேலும் ஒரு படம் உரு­வா­கிறது.

'லப்­பர் பந்து' என்று தலைப்பு வைக்­கப்­பட்­டுள்ள அப்­ப­டத்­தில் ஹரீஷ் கல்­யா­ணும் 'அட்­ட­கத்தி' தினே­ஷும் நாய­கர்­க­ளாக நடிக்­கின்­ற­னர். இரு நாய­கி­க­ளாக சுவா­சிகா விஜய், 'வதந்தி' சஞ்­சனா கிருஷ்­ண­மூர்த்தி ஆகிய இரு­வ­ரும் ஒப்­பந்­த­மாகி உள்­ள­னர். மேலும் தேவ­தர்­ஷினி, பால­சர­வ­ணன் ஆகி­யோரை முக்­கியக் கதா­பாத்­தி­ரங்­களில் காண முடி­யும்.

கிரா­மத்­தில் நடக்­கும் கிரிக்­கெட் விளை­யாட்டை மையப்­படுத்தி யதார்த்­த­மான காட்­சி­க­ளு­டன் உரு­வாக்­கப்­படும் இப்­ப­டம், தனது திரைப்­ப­ய­ணத்­தில் முக்­கி­ய­மான பட­மாக அமை­யும் என்­கி­றார் ஹரீஷ் கல்­யாண்.

"சசி இயக்­கத்­தில் நான் நடித்த 'நூறு கோடி வான­வில்' படத்­தின் படப்­பி­டிப்பு முடி­வ­டைந்­துள்­ளது. எனவே 'லப்­பர் பந்து' படத்­தில் முழுக்­க­வ­னத்­தை­யும் செலுத்தி வரு­கி­றேன்.

"இப்­ப­டத்­தின் இயக்­கு­நர் தமி­ழ­ர­சன் பச்­ச­முத்து மிகுந்த திற­மை­சாலி. அவர் கூறிய கதை பிடித்­துப்­போ­ன­தால் தயக்­க­மின்றி நடிக்­கி­றேன்," என்று ஹரீஷ் கல்­யாண் தெரி­வித்­துள்­ளார்.

சத்­ய­ராஜ், ஐஸ்­வர்யா ராஜேஷ், சிவ­கார்த்­தி­கே­யன் நடித்த 'கனா', விஷ்ணு விஷால் நடித்த 'எஃப்ஐ­ஆர்' ஆகிய படங்­களில் இணை இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­ அனுபவம் உள்ளவர் தமி­ழ­ர­சன் பச்­ச­முத்து.