ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இதையடுத்து படக்குழுவினருக்கு விருந்து அளித்துள்ளார் அவர். இப்படத்தில் விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் நாயகர்களாக நடிக்கின்றனர்.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் தனது தந்தை ரஜினி பங்கேற்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

