'சீயான்' என்று அழைக்கப்படும் விக்ரம் தனி நாயகனாக நடித்த அண்மைய படங்கள் தோல்வி அடைந்ததால் அடுத்த படத்தை கட்டாயம் வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.
அதனால் அவர் இந்தப் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் காட்சிகளை விளக்கும்படி அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பதால் இருவருக்கும் இடையே பிரச்சினை வெடித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் விக்ரம்.
தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உயிர்போகும் அளவிற்கு உடலை வருத்தி நடிக்கக் கூடியவர். அண்மைக்காலமாக, மூத்த இயக்குநர்களைவிட, வளர்ந்து வரும் இயக்குநர்
களுக்குத் தன்னுடைய படங்களை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் இவர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'மகான்', இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்த 'கோப்ரா' ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய அளவில் முயற்சி செய்து நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் படு மோசமான தோல்வியைச் சந்தித்தன.
இறுதியாக விக்ரம் நடிப்பில் வெளியாகி, ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது 2011ஆம் ஆண்டு வெளியான 'தெய்வத் திருமகள்' திரைப்படம்தான்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான, 'ராஜப்பாட்டை', 'தாண்டவம்', 'ஐ', '10 எண்றதுக்குள்ள', 'இருமுகன்', 'ஸ்கெட்ச்', 'சாமி ஸ்கோயர்', 'கடாரம் கொண்டான்', 'மகான்', 'கோப்ரா' போன்ற படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன.
எனினும் சற்று ஆறுதல்
தருவதுபோல் பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் அமைந்தது.
இயக்குநர்களிடம் ஒரு வரியை மட்டுமே கேட்டுவிட்டு படங்களில் நடிப்பதால்தான்
விக்ரம் நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர் தோல்வி அடைகின்றன என்கின்றனர் அவரது ரசிக்ரகள்.
அதனால் விக்ரம் தீவிரமாகக் கதையைக் கேட்ட பின்பு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக 'கோப்ரா', 'மகான்' போன்ற படங்களில் விக்ரம் ஏன் நடித்தார் என ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்
படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் எப்படியாவது வெற்றிப்படத்தைக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உடலை வருத்தி 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.
'கேஜிஎப்' பட பாணியில்
முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தில் பல ஆபத்தான காட்சிகளிலும் வெய்யில், காடு, மழை, என அலைந்து திரிந்து, உடலை வருத்தி நடித்து வருகிறார்
விக்ரம்.
இவ்வளவு முயற்சிகளின் பலனாகப் படம் வெற்றியடையவேண்டும் என்ற பதற்றத்திலும் பயத்திலும் இருக்கும் விக்ரம் கதையைப் பற்றி பா.ரஞ்சித்திடம் கேட்டது ஒன்றும் தவறில்லை.
"அடுத்தடுத்து என்ன காட்சி எடுக்கப்போகிறீர்கள்? எப்படி எடுக்கப்போகிறீர்கள்? என விக்ரம் துருவித் துருவி கேள்வி கேட்டிருக்கிறார் விக்ரம்.
"அதனால் கோபம் அடைந்த பா.ரஞ்சித் சற்று பொங்கி தன்னுடைய கோபத்தை வெளிப்
படுத்தியதாகவும் தகவல்
கசிந்துள்ளது.
இது குறித்து பிரபல சினிமா விமர்சகரான செய்யாறு பாலு, "நடிகர் விக்ரம் கதை கேட்கும் போதே 100 சந்தேகங்கள்
கேட்பார். ஆனால் கதையைக் கேட்டுவிட்டால், இயக்குநரை முழுதாக நம்பிவிடுவார்.
"நடிகர் விக்ரம் இயக்குநரை முழுவதுமாக நம்பியதால்
உருவான படங்கள்தான் 'அந்நியன்', 'ஐ', போன்ற படங்கள்.
"குறிப்பாக 'ஐ' படத்தில் வேறு எந்த நடிகராக இருந்தாலும் பாதியிலேயே படப்பிடிப்பில் இருந்து கிளம்பி இருப்பார்.
"'தங்கலான்' படத்தில் காட்சிகளைப் பற்றி ரஞ்சித்திடம் விவாதம் செய்வதில் இருந்து விக்ரமின் பயம் நமக்குத் தெரிகிறது," எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 விழுக்காடு முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தை விட்டு விக்ரம் வெளியேற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம்தான்
தற்போது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மிகப்
பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் இயக்குநர் பா ரஞ்சித்தும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தொடர் தோல்வியால் 'தங்கலான்' படத்தின் காட்சிகளை விவரிக்கச் சொல்லி இயக்குநர் பா.ரஞ்சித்திடம் பிரச்சினை