'ரசிகர்களின் மனநிறைவே மிகப்பெரிய விருது': படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் அனுபவங்கள்

'ரசிகர்களின் மனநிறைவே மிகப்பெரிய விருது': படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் அனுபவங்கள்

3 mins read
3ec2cf2f-9257-409c-9543-9a28cbf0bd7d
-
multi-img1 of 2

மோனலிசா

"ஒரு திரைப்­ப­டம் வெளி­யா­வ­தற்கு சில தினங்­கள் முன்­னால் வரை, படத்தை மெரு­கேற்­றிக்­கொண்டே இருப்­போம். சில காட்­சி­கள் நீக்­கப்­படும் வாய்ப்­பு­களும் சில காட்­சி­கள் நீட்­டிக்­கப்­படும் சூழ­லும் இறுதி வாரம் வரை நில­வும்," என்­கி­றார் 'பொன்­னி­யின் செல்­வன்' இரண்­டாம் பாகத்­தின் படத்தொகுப்­பா­ளர் ஸ்ரீகர் பிர­சாத்.

வர­லாற்­றுப் புனை­வு­களை திரைப்­ப­ட­மாக்­கு­வது பொது­வா­கவே சவா­லான ஒன்று. அதி­லும் ஐந்து பாகங்­க­ளைக் கொண்ட மக்­கள் மத்­தி­யில் பிர­ப­ல­மான புதி­னத்­தைக் காட்­சி­க­ளாக உரு­வாக்கி, சுவா­ர­சி­யம் குறை­யா­மல் குறிப்பிட்ட நேரத்­துக்­குள் தொகுப்­ப­தில் பல்­வேறு சவால்­கள் இருந்­ததா­கச் சொல்­கி­றரா் திரு ஸ்ரீகர்.

இயக்­கு­ந­ரின் திரைக்­கதை கலந்­து­ரை­யா­டல் நாளி­லி­ருந்தே ஏறத்­தாழ மூன்­றாண்டு கால­மாக இத்­தி­ரைப்­ப­டத்­தின் வேலை­களில் ஈடு­பட்டு வரும் திரு ஸ்ரீகர், இரண்டு பாகங்­க­ளின் படப்­பி­டிப்­பும் ஒரே சம­யத்­தில் மொத்­த­மாக நடை­பெற்­ற­தா­க­வும் முதல் பாகம் வெளி­யான அன்று முதலே இரண்­டாம் பாகத்­தின் படத்­தொகுப்பு வேலை­கள் தொடங்­கி­ய­தா­க­வும் கூறி­னார்.

இயக்­கு­ந­ரின் திரைக்­க­தை­யைப் படித்த பின்­னரே 'பொன்­னி­யின் செல்­வன்' புத்­த­கத்­தைப் படித்­த­தாக கூறிய ஸ்ரீகர் பிர­சாத், ஒரு படத்­தொ­குப்­பா­ள­ராக இயக்­கு­ந­ரின் சிந்­த­னை­யைக் காட்­சி­களின் கோர்­வை­யில் பிர­தி­ப­லிக்க வேண்­டிய கடமை தமக்கு உள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

"அத­னால்­தான் முத­லில் திரைக்­க­தை­யைப் படித்­தேன். பிறகு புத்­த­கத்­தில் உள்ள வேறு ஏதே­னும் சம்­ப­வம் முக்­கி­யம் என்று கரு­தி­னால் அவ­ரு­டன் கலந்­தா­லோ­சித்­தேன். இயக்­கு­நர் மணி­ரத்­னத்­து­ட­னான கலந்­துரை­யா­டல்­கள் எப்­போ­துமே ஆக்­க­க­ர­மாக இருக்­கும்," என்­றும் அவர் பகிர்ந்­தார்.

அதீத திட்­ட­மி­டல், நேர்த்­தி­யான முன்­னேற்­பா­டு­க­ளு­ட­னும் இத்­தி­ரைப்­ப­டத்­தின் அனைத்து வேலை­களும் இது­நாள் வரை நடை­பெற்­ற­தா­கக் குறிப்­பிட்ட ஸ்ரீகர் பிர­சாத், இத்­தி­ரைப்­ப­டத்­தின் காட்­சி­களை மெரு­கூட்­டும் பணி சவால்­கள் நிறைந்­த­தாக இருந்­தது என்­றும் நீண்ட நாள்­கள் தேவைப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­தார்.

"முதல் முறை­யாக இயக்­கு­நர் மணி­ரத்­னத்­து­டன் 'அலை­பா­யுதே' திரைப்­ப­டத்­தில் இணைந்து பணி­யாற்­றி­னேன். மணி­ரத்­னம், திரைப்­பட தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மிகுந்த மதிப்­பும் முன்­னு­ரி­மை­யும் அளிப்­பார். ஒவ்­வொரு முறை­யும் அவ­ரு­டைய திரைப்­ப­டங்­க­ளி­லும் புதிய உத்தி­க­ளைக் கையாண்டு கதை­சொல்­லும் சோதனை முயற்­சி­களில் ஈடு­படும் வாய்ப்­பு­கள் கிடைக்­கும்," என்று பாராட்­டு­கிறார் ஸ்ரீகர் பிர­சாத்.

இளம் வய­தில் செய்­தி­யா­ள­ராக ஆக வேண்­டும் என்ற கன­வு­டன் இருந்த திரு ஸ்ரீகர், தன்­னு­டைய தந்தை உள்­பட குடும்­பத்­தி­னர் பலர் படத்­தொ­குப்­புத் துறை­யில் பணி­யாற்­றவே இத்­துறை பற்றி தெரிந்­து­கொள்­ளும் ஆர்­வத்­தின் பேரி­லேயே முத­லில் இப்­ப­ணியைத் தொடங்­கி­னார்.

நாள­டை­வில் இப்­ப­ணி­யில் உள்ள நேர்த்­தி­யும் நுணுக்­க­மும் தொழில்­நுட்ப வளர்ச்­சிக்­கேற்ப புத்­தாக்க சிந்­த­னை­களைச் செயல்­ப­டுத்திப் பார்க்­கும் போக்­கும் இவரை வெகு­வாக கவர்ந்­தன. ஒரு ரசி­க­னின் கவ­னத்தை இரண்­டரை மணி நேரம் சித­ற­டிக்­கா­மல் கட்­டிப்­போ­டும் பணி­யும் அதற்­கான திற­னும் இன்­று­வரை தம்மை உற்­சாக நடை­போட வைப்­ப­தா­கச் சொல்­கி­றார் திரு ஸ்ரீகர்.

"ஒவ்­வொரு நாளும் புதி­தாக ஏதே­னும் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற வேட்­கையே என்னை முன்­ன­கர்த்­திச் செல்­கிறது. முன்­பெல்­லாம் நாள்­தோ­றும் ஏறத்­தாழ 18 மணி நேரத்­திற்­கும் மேல் பணி­பு­ரிந்­து­கொண்­டி­ருந்­தேன். அண்­மைக்­கா­ல­மா­கத்­தான் பத்து மணி நேரத்­திற்­குள் பணி­களை முடிக்­கும் வழக்­கத்தைப் பின்­பற்­று­கிறேன்.

"சினிமா என்­பது பொழு­து­போக்கு அம்­ச­மாக மட்­டும் பாவிக்­கப்­ப­டா­மல் மனித வாழ்­வினை கண்­முன் பிர­தி­ப­லிக்­கும் கலை­யாக கொண்­டா­டப்­பட வேண்­டும். எனவே நேரம் கிடைக்­கும் போதெல்­லாம் இந்­திய அள­வில் படத்­தொ­குப்புத் துறை­யைச் சார்ந்த மாண­வர்­க­ளுக்குப் பாடம் நடத்தி, இத்­து­றைக்கு என்­னால் முடிந்த பங்கை ஆற்­று­கி­றேன்," என்கிறார் திரு ஸ்ரீகர்.

40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான திரைப்­ப­டத்துறை அனு­ப­வத்­தில் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்­கி­லம் உள்­பட 15 மொழி­களில் இது­வரை 600க்கும் மேற்­பட்ட­ ப­டங்­களில் பணி­யாற்­றி­யுள்­ளார்.

தன்­னு­டைய முதல் படத்­தி­லேயே சிறந்த படத்­தொ­குப்­பிற்­காக தேசிய விருது பெற்­ற­வர் திரு ஸ்ரீகர். இது­வரை மொத்­தம் ஒன்­பது தேசிய விரு­து­களும் அதிக மொழி­களில் திரைப்­ப­டங்­களில் பணி­யாற்­றி­ய­தற்­காக லிம்கா சாதனை விருது உள்­பட பல்­வேறு விரு­து­க­ளை­யும் வென்­றுள்­ளார்.

ஒரு திரைப்­ப­டத் தொகுப்­பா­ள­ராக திரு ஸ்ரீகர் பிர­சாத்­தின் பல்­வேறு சுவா­ர­சிய அனு­ப­வங்­கள் பற்­றி­யும் பொன்­னி­யின் செல்­வன் பாகம் 1,2 திரைப்­ப­டங்­களில் இவ­ரு­டைய பங்கு குறித்­தும் மேலும் அறிய தமிழ் முர­சிற்­காக இவர் அளித்த பிரத்­தி­யேக இணை­ய­வழி பேட்­டியை https://youtu.be/TwM8NwdO9Iw காண­லாம்.

மணிரத்னத்துடன் ஸ்ரீகர் பிரசாத். படங்கள் ஸ்ரீகர் பிரசாத்