'கனவிலும் நினைக்கவில்லை'

3 mins read
03469fe2-fbb9-4e23-8e74-9c9f736ea542
-

இந்­தி­யக் கிரிக்­கெட் அணி வீரர் எம்­எஸ்.டோனி திரைப்­படத் தயா­ரிப்­பா­ள­ராக மாறி­யுள்­ளார். அவர் தமி­ழில் தயா­ரிக்­கும் முதல் படம் 'எல்­ஜி­எம்'.

'லவ் டுடே' படத்­தில் நடித்­துள்ள இவானா தான் இதி­லும் நாயகி.

இப்­ப­டிப்­பட்ட வாய்ப்பு கிடைக்­கும் என தாம் கன­வி­லும் நினைத்­துப் பார்க்­க­வில்லை என்­றும் தனது குடும்­பத்­தார் பெரும் மகிழ்ச்சி அடைந்­த­தா­க­வும் சொல்­கி­றார் இவானா.

"எம்.எஸ். டோனியை சிறார்­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை அனைத்­துத் தரப்­பி­ன­ரும் கொண்­டா­டு­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்ட மிகச்­சி­றந்த வீரர் திரை­யு­ல­குக்கு வந்­தி­ருப்­பது நல்ல விஷ­யம்.

"திடீ­ரென ஒரு­நாள் 'எல்­ஜி­எம்' படத்­தில் நடிக்­கக்­கேட்டு ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­தது. டோனி தயா­ரிக்­கும் படம் என்று தெரி­ய­வந்­தது. நம்­பவே மு­டி­ய­வில்லை. என்­னை­விட, குடும்­பத்­தார் அனை­வ­ருமே துள்­ளிக் குதித்­த­னர். ஏனெ­னில் என் வீட்­டில் உள்ள அனை­வ­ருமே டோனி­யின் தீவிர ரசி­கர்­கள். இப்­ப­டி­யோர் வாய்ப்பு கிடைத்­தது எனது அதிர்ஷ்­டம்," என உற்­சா­கம் குறை­யா­மல் பேசு­கி­றார் இவானா.

'எல்­ஜி­எம்' படத்­தின் பூசை நிகழ்­வில்­தான் டோனி­யின் மனைவி சாக்­‌ஷியை முதன்முத­லாக சந்­தித்­தா­ராம். டோனி­யின் மனைவி என்­கிற 'பந்தா' எல்­லாம் அவ­ரி­டம் இல்லை என்­றும் பூசை­யில் பங்­கேற்ற அனை­வ­ரி­ட­மும் அவர் இயல்­பா­கப் பேசி­ய­தா­க­வும் பாராட்­டு­கிறார் இவானா.

"ஒட்­டு­மொத்த நாடும் கிரிக்­கெட் ரசி­கர்­களும் கொண்­டா­டும் வீர­ரின் மனைவி என்­ப­தற்­கான எந்­தச் சுவ­டை­யும் சாக்­‌ஷி­யி­டம் காண முடி­ய­வில்லை. பூசைக்கு வந்­தி­ருந்த அனை­வ­ரி­ட­மும் தாமே வலிய சென்று தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக்கொண்டு பேசி­னார்," என்று சொல்­லும் இவானா, 'எல்­ஜி­எம்' படம் புது­மை­யான கதைக்­க­ளத்­து­டன் உரு­வா­கிறது என்­கி­றார்.

இந்­தப் படத்­தில் யோகி பாபு முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். ஏற்­கெனவே 'லவ் டுடே' படத்­தில் யோகி­பாபு முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருந்­தா­லும், அவ­ரு­டன் இணைந்து தோன்றும் காட்­சி­கள் இவா­னா­வுக்கு அமைய­வில்லை. அந்த மனக்­கு­றையை 'எல்­ஜி­எம்' போக்­கி­யுள்­ளது.

"யோகி சார் படப்­பி­டிப்­புக்கு வந்­து­விட்­டால் போதும், மொத்த படப்­பி­டிப்பு அரங்­கும் சிரிப்­ப­லை­யில் மூழ்­கி­விடும். அவர் கிளம்­பிச் செல்­லும் வரை ஏதா­வது பேசி, நடித்­துக்­காட்டி அனை­வ­ரை­யும் சிரிக்க வைப்­பார். குறிப்­பாக நகைச்­சுவைக் காட்­சி­க­ளைப் பட­மாக்­கும்­போது அவர் எதிர்­பா­ரா­த­வி­த­மா­கப் பேசும் சொந்த வச­னங்­க­ளைக் கேட்­ப­வர்­களும் அவ­ரது உடல் மொழி­யைப் பார்ப்­ப­வர்­களும் நிச்­ச­யம் சிரிப்­பைக் கட்­டுப்­ப­டுத்த இய­லாது.

"அவ­ரு­டன் இணைந்து நடித்­த­போது சில நடிப்­புக் குறிப்­பு­க­ளைத் தந்­தார். நகைச்­சு­வைக் காட்சி­களுக்கு எத்­த­கைய முக­பா­வங்­கள் கைகொ­டுக்­கும், ஒரு கதா­பாத்­தி­ரம் பேசும் நகைச்­சுவை வச­னத்­துக்கு எவ்­வாறு பதி­லடி கொடுக்க வேண்­டும் என்­பதை எல்­லாம் விளக்­கிச் சொன்­னார்.

"அதே­ச­ம­யம் உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­க­ளி­லும் அவ­ரது தேர்ந்த நடிப்பு என்னை வியக்க வைத்­தது. அவ­ரது திற­மை­யால் இப்­போது உள்­ள­தை­விட மேலும் பல உய­ரங்­க­ளைத் தொடு­வார்," என்­கி­றார் இவானா.

புதுப் படத்­தில் முன்­னாள் கதா­நா­யகி நதி­யா­வு­ட­னும் இணைந்து நடிக்­கி­றா­ராம். தனது பெற்­றோர் நதி­யா­வின் தீவிர ரசி­கர்­கள் என்­றும் சொல்­கி­றார்.

"நதி­யா­வைப் பார்ப்­ப­தற்­கா­கவே என்­னு­டன் படப்­பி­டிப்பு அரங்­குக்கு வரு­வார் அம்மா. வாய்ப்பு கிடைக்­கும் போதெல்­லாம் நதி­யா­வுடன் பேசி­வி­டு­வார். நதி­யா­வின் நடிப்பு அனை­வ­ரை­யும் அசர வைத்­தது. வசனங்களைக் கச்சிதமாகப் பேசி முதல் முயற்சியிலேயே தனக்கான பகுதியில் நடித்து முடித்துவிடுவார். அதைக் கண்டு பலமுறை வியந்து போயிருக்கிறேன்," என்று சொல்லும் இவானா, தமிழ் ரசிகர்களின் மனதில் ஓர் இடம் அமைந்தால் அதுவே போதும் என்கிறார்.

, :

தமிழகத்  