'விருதுகள் பெற விரும்புகிறேன்'

'விருதுகள் பெற விரும்புகிறேன்'

1 mins read
31f795f7-7609-480c-82f3-49ebf9381004
-

கதா­நா­ய­கி­யாக நடிப்­ப­தை­விட, விரு­துக்­கான கதா­பாத்­தி­ரங்­களையே தாம் அதி­கம் விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார் நடிகை சாக்‌ஷி அகர்­வால்.

மக்­கள் மன­தில் பதி­யும் கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­பதே முக்­கி­யம் என்­றும் சம்­ப­ளம் என்­பது இரண்­டாம் பட்­சம்­தான் என்­றும் அவர் ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

'நான் கட­வுள் இல்லை', 'பஹிரா' உள்­ளிட்ட படங்­கள் எனக்கு நல்ல பெயரை பெற்­றுத் தந்­துள்­ளன. நாய­கிக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் 'டிரிங்... டிரிங்...' எனத் தலைப்பு வைக்­கப்­பட்­டுள்ள படத்­தில் நடித்து முடித்­தி­ருக்­கி­றேன்.

"நான் நடித்­துள்ள 'கீ' என்ற பட­மும் வெளி­யீடு காண உள்ளது. இப்­படி வரி­சை­யாக வாய்ப்பு­கள் கிடைத்து, படங்­கள் உரிய நேரத்­தில் வெளி­யீடு கண்டு வந்­தா­லும் ரசி­கர்­க­ளின் இத­யங்­களில் இடம்­பி­டிக்க வேண்­டும் என்­பதே எனது முதன்மை விருப்­பம்.

"மேலும் நடிப்­புக்­காக தேசிய அள­வில் விரு­து­கள் வாங்­க­வேண்­டும் என்­பது என் வாழ்­நாள் லட்­சி­யம்.

"உரிய வாய்ப்­பு­கள் வழங்­கா­மலேயே சவா­லான கதா­பாத்­தி­ரங்­களில் இவ­ரால் நடிக்க முடி­யாது என முத்­திரை குத்­தி­வி­டக்­கூடாது.

"எனினும் எனது விருப்பம் கூடிய விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்," என்­கி­றார் சாக்‌ஷி அகர்­வால்.