'மொழி பேதம் வேண்டாம்'

1 mins read
c46cd3ce-89b2-4932-ae7b-3c17410eec3d
-

இந்திப் படங்­கள், தென்­னிந்­திய படங்­கள் என்ற மொழி பேத சர்ச்சை தேவை­யற்­றது என்­கிறார் அதிதி ராவ்.

தன்­னைப் பொறுத்­த­வரை இத்­த­கைய பேதங்­கள் ஏதும் இல்லை என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

"உண்­மை­யில் சினி­மா­விற்கு மொழி பேதமே இல்லை. இதை அனை­வ­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

"நம் மக்­க­ளுக்­காக திரைப்­படங்­களை உரு­வாக்­கு­கி­றோம். எந்த மொழிப் படைப்­பாக இருந்­தா­லும், அதன் நோக்­கம் என்­பது ரசி­கர்­களை மகிழ்­விப்­ப­து­தான்.

"ஒவ்­வொரு படத்­தை­யும் ஏற்­கும்­போது இதைத்­தான் மனதில் நினைத்­துக்கொள்­கி­றேன்.

"ரசி­கர்­க­ளைப் பொறுத்­த­வரை மொழி பேதம் பார்ப்பதில்லை. நல்ல படைப்­பு­கள் என்­றால் உல­கின் எந்த மூலை­யாக இருந்­தா­லும் உரிய வர­வேற்பு கிடைக்­கும்," என்­கிறார் அதிதி ராவ்.

அதிதியும் நடிகர் சித்தார்த்தும் காதல் வயப்பட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதை அதிதி தவிர்த்துவிடுகிறார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் விவாதிப்பதை விரும்பவில்லை என்கிறார் அதிதி. உரிய நேரம் வரும்போது திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.