'நண்பா' என்று குறிப்பிட்ட விஜய்; நெகிழ்ந்த விஷால்

'நண்பா' என்று குறிப்பிட்ட விஜய்; நெகிழ்ந்த விஷால்

1 mins read
e6bc1b5f-f37b-461e-97ad-41fea2e87853
-

விஜய்க்­காக இரண்டு கதை­களைத் தயார் செய்­துள்­ள­தா­க­வும் அதை விஜய்­யி­டம் நேர­டி­யாக தெரி­வித்­த­போது, 'என் நண்­ப­ருக்­காக இதைக்­கூட செய்ய மாட்­டேனா' என்று அவர் கூறி­ய­தா­க­வும் நடி­கர் விஷால் கூறி­யுள்­ளார்.

தற்­போது 'மார்க் ஆண்­டனி' என்ற படத்­தில் நடித்து வரு­கிறார் விஷால். இந்­நி­லை­யில், இப்­ப­டக்­கு­ழு­வி­னர் விஜய்யை சந்­தித்­த­னர்.

அப்­போது படத்­தின் முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பை பார்த்­துள்­ளார் விஜய். பின்­னர் படக்­கு­ழு­வி­ன­ருக்கு அவர் வாழ்த்து தெரி­வித்­தார்.

"இயக்­கு­ந­ராக வேண்­டும் என்­பது எனது நீண்ட நாள் ஆசை. அது 'துப்­ப­றி­வா­ளன் 2' படம் மூலம் நிறை­வேறி உள்­ளது. தொடர்ந்து படங்­கள் இயக்க ஆர்­வ­மாக உள்­ளேன்.

"உங்­க­ளுக்­கும் இரண்டு கதை­கள் தயார் செய்­துள்­ளேன் என்­றும் விஜய்­யி­டம் தெரி­வித்­த­போது, அவர் சிறு தயக்­க­மும் இன்றி, 'நீ வா நண்பா... நான் இருக்­கி­றேன். சேர்ந்து பய­ணிப்­போம்' என்று சொன்­னார்.

"விஜய் அப்படிச் சொன்ன தைக் கேட்டு நான் நெகிழ்ந்து போனேன்," என்­கி­றார் விஷால்.