கதைக்கேற்ப நடிப்பதற்கு தாம் தயங்குவதில்லை என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அண்மையில் வெளியான 'ஃபர்ஹானா' படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்துள்ளார் இவர்.
"கதைக்குத் தேவைப்பட்டால் நூறு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்கவும் நான் தயார். நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம் இருக்கும்," என்கிறார் ஐஸ்வர்யா.

