விருதைக் குறிவைக்கும் படம்

விருதைக் குறிவைக்கும் படம்

1 mins read
0b776998-686d-4bc6-8fd4-f7fb18e0ba36
-

தேசிய விரு­து­கள் கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் வெளியீடு காண உள்­ளது 'உதிர்' திரைப்­ப­டம்.

ஞான ஆரோக்­கிய ராஜா கதை, திரைக்­கதை, வச­னம், பாடல்­கள் எழுதி, தயா­ரித்து, இயக்­கி­யுள்ள படம் இது.

'இது கதை­யல்ல நிஜம்' படத்­தில் நடித்த சந்­தோஷ் சர­வணன், விதுஷ் ஆகிய இரு­வ­ரும் கதா­நா­ய­கர்­க­ளாக நடித்­துள்­ள­னர்.

ரத்ன­கு­மா­ரின் 'கம்­பீ­ரம்' படத்­தில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்த மனிஷா கதா­நா­ய­கி­யாக நடித்­துள்­ளார். மேலும், மனோ­பாலா, சிங்­கம்­புலி, தேவ­தர்ஷினி, முத்­துக்­காளை, மணி, சிசர் மனோ­கர், போண்டா மணி ஆகி­யோ­ரும் உள்­ள­னர்.

"படிக்­கும்­போது வரும் காதல் சரியா, தவறா என்­பதை மைய­மா­கக் கொண்டு இந்­தப் படம் உரு­வாகி உள்­ளது.

"நான்கு பாடல்­கள் உள்­ளன. `நமச்­சி­வாயா... நமச்­சி­வாயா... ஓம் நமச்­சி­வாய' பாடல் புகழ் அரவிந்த் ஸ்ரீராம் பாடல்­க­ளுக்கு இசை அமைத்­துள்­ளார். மதுரை ஈஸ்­வர் பின்­னணி இசை­ய­மைத்­துள்­ளார்.

"தணிக்கை குழு, 'யூ' சான்றி­தழ் வழங்­கி­யுள்­ளது. திரைப்­பட விமர்­ச­கர்­கள் இந்­தப் படம் கண்­டிப்­பாக தேசிய விரு­துக்குப் பரிந்து­ரைக்­கப்­படும் என்று கூறி­யது உற்­சா­கம் அளிக்­கிறது," என்­கிறார் இயக்­கு­நர்.