இது கூடாது: ரசிகருக்கு அறிவுரை கூறிய விஜய்

இது கூடாது: ரசிகருக்கு அறிவுரை கூறிய விஜய்

1 mins read
8fcf12d2-0a73-403a-8b1c-f4b366721c8e
-

தனது மக்­கள் இயக்க நிர்­வா­கி­களைச் சென்­னை­யில் நேரில் சந்­தித்து ஆலோ­சனை நடத்தி உள்­ளார் நடி­கர் விஜய்.

அப்­போது தனது நெஞ்­சில் கையெ­ழுத்­தி­டு­மா­றும் விஜய் என்ற பெயரை பச்சை குத்­திக் கொள்­ளப் போவ­தா­க­வும் கூறிய ரசி­க­ரி­டம், அவ்­வாறு செய்­யக்­கூடாது என்று அவர் அறி­வுரை கூறி­னார்.

"இதுபோல் செய்­யக்­கூ­டாது. அதற்­குப் பதி­லாக மக்­க­ளுக்­கான நலத்­திட்ட உத­வி­களை வழங்­கு­வதில் கவ­னம் செலுத்­துங்­கள். அதுதான் முக்கியம்.

"பிறர்க்கு உதவி செய்ய போது­மான பணம் இல்­லை­யெ­னில் நிர்­வா­கி­கள் தயக்­க­மின்றி என்னை அணு­க­லாம். என்­னால் முடிந்த உத­வி­யைச் செய்­வேன்," என்­றார் விஜய்.

மேலும் மக்­க­ளுக்கு உதவ புதிய நலத்­திட்ட உத­வி­கள் குறித்து இயக்க நிர்­வா­கி­கள் யோசிக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­ட­தா­கத் தக­வல்.