நடிகர், இயக்குநர் அவதாரம் எடுக்கும் பாடலாசிரியர்

நடிகர், இயக்குநர் அவதாரம் எடுக்கும் பாடலாசிரியர்

1 mins read
035bfc82-2492-4872-b1b2-3f2a69260d82
-

முன்­னணி பாட­லா­சி­ரி­யர்­களில் ஒரு­வ­ரான பிரி­யன் கதா­நா­ய­கனா­க­வும் இயக்­கு­ந­ரா­க­வும் அவ­தா­ரம் எடுத்­துள்­ளார்.

மிஷ்­கின், மகிழ்­தி­ரு­மேனி போன்ற இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் இவர் இயற்­றிய பாடல்கள் நிச்­ச­யம் இடம்­பெற்று இருக்கும்.

'எகிடு தகிடு' ('சித்­தி­ரம் பேசுதடி'), 'உனக்­காக வரு­வேன்' ('பிச்­சைக்­கா­ரன்') உள்­ளிட்ட பாடல்­களை எழு­தி­ய­வர் பிரி­யன்.

இது­வரை ஐந்­நூற்­றுக்­கும் மேற்­பட்ட பாடல்­களை எழுதி உள்­ளார். மேலும் தமது பயிற்­சிப் பட்­டறை மூலம் ஏரா­ள­மான இளம் பாட­லா­சி­ரி­யர்­க­ளுக்கு பாடல் எழு­தும் பயிற்சி அளிக்­கும் பிரி­யன், 'அர­ணம்' படத்­தில் இயக்­கு­ந­ரா­க­வும் நாய­க­னா­க­வும் கள­மி­றங்­கி­ உள்­ளார்.

"ஒரு பெரிய ஜமீன் வீடு. அந்த வீட்­டில் ஒரு மர­ணம் நிகழ்­கிறது. அந்த மர­ணத்­துக்குப் பிறகு அவ்வீட்­டில் பேய் இருப்­ப­தாக நம்­பு­கி­றார்­கள்.

"அந்த வீட்­டில் பிறந்தவர்தான் நாய­கன். திரு­ம­ண­மாகி சென்னை­யில் வசிக்­கும் நாயகன், தனது தாத்­தா­வின் மறைவுக்­குப் பிறகு கிரா­மத்­துக்குத் திரும்ப வேண்­டிய கட்­டா­யம் ஏற்­ப­டு­கிறது.

"கிரா­மத்­துக்கு வந்­த­பி­றகு நாய­க­னும் அவ­ரு­டைய மனைவி­யும் பல பிரச்சி­னை­க­ளைச் சந்­திக்­கி­றார்­கள். அவற்றை அவர்கள் எப்படிச் சமா­ளிக்­கி­றார்­கள் என்­ப­து­தான் கதை," என்­கி­றார் பிரி­யன்.