'டக்கர்': இது காதல் மோதல்

'டக்கர்': இது காதல் மோதல்

3 mins read
f1568615-e7cf-47f8-90f1-68f157e901a0
-

அண்­மைய சில ஆண்­டு­க­ளாக தனக்­கான கதை­க­ளை­யும் படங்­க­ளை­யும் தேர்வு செய்­வ­தில் மிகுந்த கவ­னம் செலுத்தி வரு­கி­றார் சித்­தார்த்.

அவ­ரது நடிப்­பில் உரு­வாகி வரும் 'டக்­கர்' படம் விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது. கார்த்­திக் ஜி.கிரிஷ் இயக்­கும் இந்­தப் படத்­தில் திவ்­யன்ஷா நாய­கி­யாக நடிக்­கி­றார்.

"தற்­போது வெளி­யா­கும் படங்­களில் பெரும்­பாலா­னவை திகில், மர்­மங்­கள் நிறைந்த படைப்­பு­க­ளா­கவே உள்­ளன. எனவே ஜன­ரஞ்­ச­க­மான படத்தை ரசி­கர்­களுக்கு அளிக்க வேண்­டும் என யோசித்­த­ போ­து­தான் 'டக்­கர்' கதை உரு­வா­னது. 'டக்­கர்' என்­றால் மோதல் என அர்த்­தம்.

"எந்த விஷ­யத்­தி­லும் விட்­டுக்­கொ­டுக்­காத, பிறர் கருத்தை ஏற்­காத 'ஈகோ' அதி­கம் உள்ள கதா­நா­ய­கன். மறு­பக்­கம் முற்றிலும் மாறு­பட்ட சிந்­த­னை­கள் கொண்ட நாயகி. இவர்­கள் இரு­வ­ரும் சந்­தர்ப்ப சூழ்­நி­லை­யால் ஒரே நேர்க்­கோட்டில் இணைந்து பய­ணம் செய்ய வேண்­டிய கட்­டா­யம் ஏற்­ப­டு­கிறது.

"இந்த இரு­வ­ருக்­கும் இடையே நடக்­கும் சம்­ப­வங்­கள்­தான் இப்­படத்தின் கதை. சின்­னச் சின்ன சம்பவங்­க­ளால் இரு­வ­ரும் மோதிக் கொள்­வார்­கள். பிறகு சில விஷ­யங்­க­ளுக்­காக இணைந்து செயல்­படு­வார்­கள்.

"காதல், மோதல், எதிர்­மறை நகைச்­சுவைக் காட்­சி­கள் என சுவா­ர­சி­ய­மாக நக­ரும். அத­னால் படம் முடி­யும்­வரை ரசி­கர்­க­ளின் கவனம் வேறு எங்­கும் சித­றாது," என்று உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார் இயக்­கு­நர் கார்த்­திக் ஜி.கிரிஷ்.

இவர் இயக்­கு­நர் சங்­க­ரின் பாச­றை­யில் இருந்து வந்­த­வர். இவ­ரது முதல் படம் 'கப்­பல்'. அதை சங்­க­ரின் சொந்­தப்­பட நிறு­வ­னம்­தான் வெளி­யிட்­டது.

"பொது­வாக ஒரு படத்தை உரு­வாக்க நல்ல கதை தேவை. கதை தயா­ரா­ன­தும் அதில் நடிக்க ஒரு கதா­நா­ய­கன் முன்­வர வேண்­டும். கதையைப் பட­மாக்க நல்ல தயா­ரிப்­பா­ளர் அமைய வேண்­டும். இவை அத்­த­னை­யும் சாத்­தி­ய­மான பிற­கு­தான் பட வேலை­கள் தொடங்­கும். எனவே ஒரு படத்தை வெளி­யி­டு­வ­தற்கு முன்பு பல­வற்­றைக் கடந்­து­வர வேண்­டி­யி­ருக்­கும்.

"அப்­ப­டித்­தான் 'டக்­கர்' படம் உரு­வாகி உள்­ளது. சித்­தார்த் எனது மன ஓட்­டங்­க­ளைப் புரிந்­து­கொண்டு ஒத்­து­ழைத்­தார். அவ­ரைப் போன்ற அனு­ப­வம் உள்ள கதா­நா­ய­கன் இந்­தக் கதை­யில் நடிப்­பது பெரும் பலம்," என்­கி­றார் கார்த்­திக் ஜி.கிரிஷ்.

கதைப்­படி, காதல் என்­றால் அழ­கான உணர்வு என்று நம்­பு­கி­றார் சித்­தார்த். ஆனால் காதல் என்­பது வெறும் பம்­மாத்து என்­றும் உட­லு­ற­வுக்கு மற்­றொரு பெயர்­தான் காதல் என்றும் நம்­பு­கி­றார் நாயகி திவ்­யன்ஷா.

இவ்­வாறு எதி­ரெ­திர் கருத்­து­களும் செயல்­பா­டு­களும் கொண்ட இரு­வ­ரி­டையே காதல் மலர்ந்­தால் என்­ன­வா­கும் என்­ப­து­தான் 'டக்­கர்' படம்.

சித்­தார்த் ஓட்­டு­நர் கதா­பாத்­தி­ரத்­தில் வருகிறார். கார் நிறு­வன உரி­மை­யா­ள­ராக நடித்­துள்­ளார் திவ்­யன்ஷா.

யோகி ­பா­பு­வுக்குத் தந்தை, மகன் என இரட்டை வேடங்­க­ளாம். முதன்­மு­றை­யாக இரட்டை வேடங்­களில் நடிப்­ப­தால் அதி­கம் மெனக்­கெட்­டுள்­ளா­ராம்.

"தனது கதா­பாத்­தி­ரத்­துக்­காக சித்­தார்த் உடல் எடை­யைக் குறைத்து, கிட்­டத்­தட்ட கல்­லூரி மாண­வ­ரைப்போல் மாறி­விட்­டார். ஒருவர் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ப காட்சி அளிப்­பது மிக முக்­கி­யம் என்று அடிக்­கடி சொல்­வார். நம் மன­தில் உள்ள காட்சியமைப்பை எப்­படி அவ­ரி­டம் முழு­மை­யாக விவ­ரிப்­பது என ஒரு­சில சம­யங்­களில் யோசிக்­கத் தோன்­றும். ஆனால் காட்சி அமைப்பை விளக்­கிய பின்­னர், சில நிமி­டங்­களில் தயா­ரா­கி­விடு­வார். அதன் பிறகு அவர் வெளிப்­படுத்­தும் நடிப்பு, நாம் எதிர்­பார்த்­த­தை­விட மிகச்­சி­றப்­பாக இருக்­கும்.

"திவ்­யன்ஷா வளர்ந்து வரும் கதா­நா­யகி. நாம் சொல்­வதை அமை­தி­யாகக் கேட்­டுக்­கொள்­வார். காட்சி பட­மாக்­கப்­ப­டும்­போது கச்­சி­த­மாக நடித்து அசத்­து­வார்," என்­கி­றார் இயக்­கு­நர் கார்த்­திக் ஜி.கிரிஷ்.

சித்தார்த்

, :

தமிழகத்  