தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் களில் ஒருவரான 'நிக் ஆர்ட்ஸ்' எஸ்.எஸ்.சக்கர வர்த்தி காலமானார்.
55 வயதான அவர் உடல்நலக் குறைவால் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
நடிகர் அஜித் நடித்த
'சிட்டிசன்', 'ராசி', 'வாலி', 'முகவரி', 'ரெட்', 'வில்லன்', 'ஆஞ்சநேயா', 'வரலாறு' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார் சக்கரவர்த்தி. விமல் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றியடைந்த 'விலங்கு' என்ற இணையத் தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார் சக்கரவர்த்தி.
கடந்த எட்டு மாதங்களாக புற்றுநோய் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்தார் சக்கரவர்த்தி. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இதுவரை கவர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் மட்டுமே தாம் நடித்து வந்துள்ளதாகவும் இனி நல்ல வேடங்களில் நடிக்க விரும்புவதாகவும் சொல்கிறார் இளம் நாயகி நிதி அகர்வால்.
திரையுலகில் உள்ள அனை வருக்கும் அனைத்துவிதமான தொழில் நுணுக்கங்களும் புரிந்துவிடாது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் படத்தில் நல்ல கதா பாத்திரத்தில் நடிக்கிறேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கியப் படமாக இருக்கும். இதுவரை திரையில் அழகாகக் காட்சி அளிக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தி வந்தேன். இப்போது எல்லாம் மாறிவிட்டது.
"நாள்தோறும் நடிப்பு தொடர்பான புதிய அம்சங் களைக் கற்றுக்கொண்டு வருகிறேன். கதாபாத்தி ரங்களைப் புரிந்துகொண்டு நடிக்க வேண்டும் என்பதிலும் திறமையான இயக்குநர்களின் படங்களில் இடம்பெற வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளேன்," என்கிறார் நிதி அகர்வால்.
சசிகுமாருடன் 'உடன் பிறப்பே' படத்தில் நடித்த பிறகு இந்திப் படத்தில் நடிக்க தயா ராகி வருகிறார் ஜோதிகா. இந்தியில் அதிரடி நாயகியாக நடிக்க உள்ளாராம். இதற்காக கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக மும்பையில் தங்கியுள்ள அவர், தீவிர உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்சிக் கூடத்தில் எடுக்கப்பட்ட சில காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் ஜோதிகா. தலைகீழாக நின்றபடி அவர் செய்யும் உடற்பயிற்சிகளைக் கண்டு இளம் நாயகிகள்கூட அசந்து போயுள்ளனர். பலர் அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசனின் அடுத்த படத்தில் வித்யா பாலன் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.

