திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 சூர்யா நடிக்கும் புதுப் படமான 'கங்குவா' இரண்டு பாகங்களாக உருவாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டூடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை திஷா பதானி நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். தேவி பிரசாத் இசையமைக்கிறார். முப்பரிமாண தொழில்நுட்பத் தில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பத்து மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தை இரண்டு பாகங்களாகத் தயாரிக்க உள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. முதல் பாகம் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் திரை காணும் என்றும் கூறப்படுகிறது.

 திடீரென உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

'பேட்ட', 'மாஸ்டர்', 'மாறன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நாயகனாக நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். கோலார் தங்கவயலில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காகத்தான் உடல் எடையை குறைத்துள்ளாராம் மாளவிகா. "எனக்கு அருமையான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இந்த வேடத்தில் நான் ஒல்லியான, இறுக்கமான உடலமைப்புடன் காட்சியளிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். இதனால் எனக்குப் பிடித்த பிரியாணியை தியாகம் செய்துவிட்டு கடினமாகப் பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தேன். என் கதாபாத்தி ரத்துக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததும் மீண்டும் எனக்குப் பிடித்த உணவுகளைத் தொடர்வேன்," என்கிறார் மாளவிகா.

 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க வந்திருந்தார் நடிகர் கார்த்தி. இத்தகவலை அறிந்த ஏராளமான ரசிகர் கள் திரையரங்கு முன்பு திரளாகக்கூடினர். நேற்று முன்தினம் காலை ஒன்பது மணியளவில் திரையிடப் பட்ட சிறப்புக் காட்சியைக் காண கார்த்தி திரை அரங்குக்கு வந்தார். அப்போது அவரைக் காணவும் அவருடன் படம் எடுத்துக்கொள்ளவும் ரசிகர்கள் முட்டி மோதினர். இதனால் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் இருவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கார்த்தியின் பாதுகாவலர்கள் உடனடியாக அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனால் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க முடியவில்லை என கார்த்தி வருந்தி உள்ளார்.

 டுவிட்டர் தளத்தில் இருந்து சிறிது காலம் விலகி நின்று ஓய்வு எடுக்கப்போவதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறி உள்ளார். "நான் விரைவில் திரும்பி வருவேன், பத்திர மாக இருங்கள். என் படம் குறித்த அண்மைய தகவல் களை என் குழுவினர் பதிவிடுவார்கள்," என்று அவர் தெரிவித்துள்ளார்.